57 - 66: அமிர்தன . . . . . . . . . . உணர்த்துவானை
(இ-ள்) அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப
-
ஒருத்தி தன்கணவனை அமிழ்தத்தை ஒத்த இனிய பார்வையாலே
மற்றொருத்தி கூர்ந்து நோக்காநிற்ப அதனைப் பொறாதே, கமழ்கோதை
கோலாப் புடைத்து - தனது மார்பின்கட் கிடந்த மணங்கமழு
மலர்மாலையை வாங்கி அதனையே கோலாகக் கொண்டு தன்
கணவனைப் புடைத்து, தன் மார்பில் இழையினை வாங்கிக் கை யாத்து
- தன்மார்பில் வடத்தை வாங்கி அவனது முன்கைகளைச் சேர்த்துக்
கட்டி, இறுக இறுக்கி - இறுக இறுக்கிப் பிடித்துக் கொண்டு, பிழையினை
என்ன - ஏடா நீ குற்றமுடையை என்று கூறாநிற்ப, பிழை ஒன்றுங்
காணான் - அங்ஙனம் அவள் கடிதற்குக் காரணமான குற்றம் ஒன்றும்
தன்பாற் காணமாட்டாத அவன், தொழுது - அவளை வணங்கி, பிழை
கேட்கும் - நல்லாய் யான் புரிந்த குற்றம் யாது என்று அவளையே
வினவாநின்ற, தூயவனைக் காண்மின் - பிழையில்லாதவனைக் காண்மின்,
நினை ஒருத்தி பார்த்தாள் பொய்ச் சூளாள் என - ஏடா நின்னை ஒருத்தி
நோக்கினாள் அங்ஙனம் நோக்கியவள் நின்னால் சூள் பொய்க்கப்
பட்டவளே ஆதல் வேண்டும் என்று அவள் பிழையிது என எடுத்துக்
காட்ட, பார்த்தவளை பொய்ச்சூளாள் என்பது யான் அறியேன் - நல்லாய்
என்னைப் பார்த்தவளையாதல் அவள் சூள் பொய்க்கப் பட்டவள் என்பது
பற்றியாதல் யான் ஏதும் அறியேன் என்று கூறி, இரந்து மெய்ச்சூள்
உறுவானை - மேலும் அவளைப் பணிமொழி கூறி இரந்து மெய்யாகவே
ஆணையிடுகின்றவனை, மெல்லியல் ஒல்லுவ சொல்லாது பொய்ச்சூள்
என்று உரைவழுவச் சொல்ல - அதுகேட்ட மெல்லிய சாயலுடைய
அம்மடந்தை அவன் பொறுப்பனவாகிய மொழிகளைக் கூறாமல் ஏடா நீ
இப்பொழுது செய்யும் சூள்தான் என்னை? இதுவும் பொய்ச்சூளே என்று
தனது மொழி குற்றமுடைத்தாகக் கூறாநிற்ப, உறைத்தும் செறுத்தும்
உணர்த்துவானை - அதுகேட்ட அவன் அச்சூளின் கண் மேலும் மிக்கும்
வெகுண்டும் அவளது ஊடலைப் போக்க முயன்றானாக;
(வி-ம்.) அமிர்தன - அமிழ்தம்போன்ற. இது பண்பு
பற்றி வந்த
உவமை: அணங்கு - தெய்வமகள்: ஆகுபெயர். கோலாக எனற்பாலது ஈறு
தொக்கது. இழை - அணிகலன். யாத்து - கட்டி: இறுகிறுக்கி - மேலும்
மேலும் இறுக்கி என்றவாறு, குற்றமிழைப்போரை அடித்துக் கட்டிவைத்துக்
குற்றங்கூறலும் கேட்டலும் உலகியல். பிழையினை - பிழையினை
உடையாய். 'நெஞ்சறிந்ததின்மையான் தூயவன்' என்றார். பொய்ச்சூளாள்
- பொய்த்த சூளினையுடையாள்: நின்னால் சூள் பொய்க்கப்பட்டாள்
என்க. பார்த்தவளையும் பொய்ச் |
|
|
|