(வி-ம்.) தானையான் யாறு இருசார் கரையை மோதிக் கலங்கிப்
பின்னர் அணை நின்று தெளிந்து மாலையில் தன்னீழலிற் றுறக்கத்
தொழிலைக் காட்டும்; காலைப்பொழுதிலோ குருதியின் தன்மைத்தாம் என்க.
மல்லிகை முதலாகச் சுரபுன்னை ஈறாக வுள்ளன எல்லாம்
அவற்றின் மலர்க்கு ஆகுபெயர்கள். மௌவல் - முல்லை: காட்டு
மல்லிகையுமாம். மணங்கமழ் சண்பகம். நல்லிணர் நாகம் என்பன தம்
பொருட்கேற்ற இயற்கை யடையடுத்து நின்றன. அல்லி, வெள்ளாம்பலும்;
ஆம்பல், அரக்காம்பலுமாகக் கொள்க. கழுநீர் - செங்கழுநீர். வகுளம் -
மகிழம்பூ , நீர்ப்பு நிலப்பூ கோட்டுப்பூ கொடிப்பூ என்னும்
நால்வகைப்பூவும் கமழும் கரை என்பார் 'எல்லாம் கமழும்' என்றார்.
நீர்க்கரையாதலின் நீர்ப் பூக்களும் கமழ்ந்தன என்க.
'கலிழ' என்னும் செயவெனெச்சத்தைக் கலிழ்ந்து எனச்
செய்தெ
னெச்சமாகக் கொள்க.
தேறித் தெளிந்து - மிகத் தெளிந்து என்க. துறக்கத்
தொழில் -
வானுலகின்கண் நிகழும் நிகழ்ச்சிகள். கார் - இருள்: ஆகுபெயர். கலிழ்
- கலங்கிய.
காலைப்பொழுதிற் கலங்குதற்குக் காரணம் நீராடுதல்
என்க.
இதனால் நீராடன் மிகுதி கூறியவாறு.
(பரிமே.) 81. கரையென்றது கரையணைந்த நீரோட்டத்தை.
இங்ஙனம் புனலாட . . . . . .. . . . . . . .
. . . . . . . .
87 - 92: சுடுநீர் . . . . . . . . காண்மின்
(இ-ள்.) (92) நேர் இறை முன்கை நல்லவள் - நேரிய
இறையினையுடைய முன்கையினையுடைய இந் நங்கை, சிவந்த பிண்டிக்
கடிமலர் - அசோகினது சிவந்த புதுமலரை, சுடு நீர் வினைக் குழையின்
ஞால - தீயிலிட்டுச் சுட்டமையானே ஒளிமிக்க நீர்மையினையுடைய
தொழிற் சிறப்புடைய குழைபோலத் தூங்கும் படியாக, தன் காதிற் செரீஇ
- தனது செவியிலே செருகிக் கொண்டு, விடுமலர்ப் பூங்கொடிபோல
நுடங்கி - கட்டலர்ந்த மலரையுடைய பூங்கொடிபோல ஒல்கி, அடிமேல்
அடியொதுங்கி - ஒருவன் இட்டுச்சென்ற அடிச்சுவட்டின்மேல் அடியிட்டு
நடந்து சென்றவள் ஒருபால் ஒதுங்கி, தொடி முன்கை தன்கண்ணி
காரிகையாகத் திருத்தினாள் - வளையலணிந்த தனது முன்கையாலே தன்
தலையிற் சூடியுள்ள மாலையை அழகுறத் திருத்தினாள், கேள் காண்மின்
- ஆதலால் அவன் அவளுடைய காதலனே ஆதல் வேண்டும்.
இக்காட்சியினையும் காணுமின் என இவ்வாறு உவந்தவை
காட்டாநின்றனர்;
(வி-ம்.) சுடுநீர் - தீயிலிட்டுச் சுட்ட நீர்மை
என்க; சுடச்சுடஒளி
விடும் பொன் என்பவாகலின், நன்கு ஒளிவிடும் பொன்குழைபோல |
|
|
|