பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்237

   வண்ணவண் டிமிர்குரல் பண்ணைபோன் றனவே
 5 அடியுறை மகளி ராடுந் தோளே
   நெடுவரை யடுக்கத்து வேய்போன் றனவே
   வாகை யொண்பூப் புரையு முச்சிய
   தோகை யார்குரன் மணந்து தணந்தோரை
   நீடன்மின், வாரு மென்பவர் சொற்போன் றனவே
10 நாண்மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன
   மெல்லிணர் வேங்கை வியலறைத் தாயின
   அழுகை மகளிர்க் குழுவை செப்ப
   நீரயற் கலித்த நெரிமுகைக் காந்தள்
   வார்குலை யவிழ்ந்த வள்ளிதழ் நிரைதொறும்
15 விடுகொடிப் பிறந்த மென்றகைத் தோன்றிப்
   பவழத் தன்ன செம்பூத் தாஅய்க்
   கார்மலிந் தன்றுநின் குன்று போர்மலிந்து
   சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே
   கறையில் கார்மழை பொங்கி யன்ன
20 நறையி னறும்புகை நனியமர்ந் தோயே
   அறுமுகத் தாறிரு தோளால் வென்றி
   நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே
   கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை
   எழீஇப் பாடும் பாட்டமாந் தோயே
25 பிறந்த ஞான்றே நின்னை யுட்கிச்
   சிறந்தோ ரஞ்சிய சீருடை யோயே
   இருபிறப் பிருபெய ரீர நெஞ்சத்
   தொருபெய ரந்தணர் அறனமர்ந் தோயே
   அன்னை யாகலின் அமர்ந்தியா நின்னைத்
30 துன்னித் துன்னி வழிபடு வதன்பயம்
   இன்னு மின்னுமவை யாகுக
   தொன்முதிர் மரபினின் புகழினும் பலவே.
என்பது, பருவங்கண்டு அழிந்த தலைமகள் கேட்ப முருகவேளைப்
பரவுவாளாய், இப் பருவத்தே தலைமகன் வருமென்பது. படத் தோழி
வற்புறுத்தியது.

கேசவனார்பாட்டு. இசையும்அவர்; பண்ணோதிறம்.