மாலின் ஐந்து படைக்கலனும் கூறப்பட்டமை
அறிக. (63) என்று வாய்
மொழி உரைத்தென என்றியையும். ஆங்கு: அசை.
63 - 66: நலம் . . . . . . . . . . தொழுதே
(இ-ள்.) அம் சீர் நாம வாய்மொழி - அழகிய சீரினையும்
அஞ்சப்படுதலையும் உடைய வேதம், நலம்புரீஇ - தனக்கு
நன்மையுண்டாதலை விரும்பி, இது என - அவர் பெருமை இத்தகையது
என்று உரைத்ததாகலின், உள் அமர்ந்து இசைத்து - யாமும்
உள்ளத்தானே பெரிதும் விரும்பி அவற்றில் யாமறிந்தவற்றைக் கூட்டி,
உரைத்தனெம் - கூறினேமாய், பெரும்பெயர் இறை இருவரை - பெரும்
புகழுடைய நம்பி மூத்த பிரானும் வாசுதேவனுமாகிய இறைவர்
இருவரையும், தொழுது - வழிபாடுசெய்து, இருங்குன்றத்து அடியுறை
இயைகென - எளியேங்கட்கு இத் திருமாலிருஞ்சோலைமலை
அடியின்கண் உறைந்துவாழும் பேறு எய்துமாறு அருள்புரிக என்று,
பரவுதும் - வேண்டிக்கொள்வேம்.
(வி-ம்.) வாய்மொழி வேதம்: மெய்ம்மொழி என்பது
கருத்து.
வேதம் ஓதும் சான்றோர் வினை ஈண்டு வேதத்தின் மேற்றாகக்
கூறப்பட்டது. எனவே வேதமுணர்ந்த வானவரும் மேலோரும் அவ்
வேதங் கூறியாங்கு முறையே நின்னை வாழ்த்துவர்; அவர் வாழ்த்துவது
நினக்கு நலம் உண்டாகும் பொருட்டன்று. நின்னை வாழ்த்துவது தமக்கே
வீடு பேறு முதலிய நலந்தருவதாம் என்று கருதியே என்பார் 'வாய்மொழி
நலம்புரீஇ இதுவென உரைத்தென' என்றார். இதனை,
"வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனநின்பால்
தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாம் தொழவேண்டி"
(திருச்சதகம்)
எனவரும் மணிவாசகப் பெருமான் மணிவாசகத்தோடு ஒப்புக்காண்க.
புரீஇ - புரிந்து: விரும்பி. நாமம் - அச்சம்: வேதம்
தன்னைப்
பயில்வார்க்கு அஞ்சவேண்டுவன இவை என்று காட்டி அஞ்சுவித்தலான்
நாமவாய்மொழி என்றார். "அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்"
எனவரும் திருக்குறளும் ஈண்டு நினைக.
உரைத்தனெம் - உரைத்தேமாய்: யாமும் என எழுவாய்
வருவித்
தோதுக. உள்ளமர்ந்து - உள்ளத்தானே பெரிதும் விரும்பி. 'உள்ளம்
உள்கலந்து ஏத்த வல்லார்க் கல்லாற் கள்ளம் உள்ளவர்க்கு' இறைவன்
அருளானாகலின் 'உள்ளமர்ந்து' என்றார். இசைத்து என்றது.
அவ்வாய்மொழி உரைப்பதுபோன்று முறையானன்றி அங்குமிங்குமாக
யாம் எம் சிற்றறிவினாலே அறிந்தவற்றைக் கூட்டி என்பதுபட நின்றது.
இறைவன் உறையும் திருப்பதியில் வாழுதலே பெறும்பேறாக
அடியார் கருது மியல்பினை. |
|
|
|