பூத்தன்று வையை வரவு;
20 சுருங்கையின் ஆயத்தார் சுற்று மெறிந்து
குரும்பை முலைப்பட்ட பூநீர் துடையாள்
பெருந்தகை மீளி வருவானைக் கண்டே
இருந்துகிற் றானையி னொற்றிப் பொருந்தலை
பூத்தன ணீங்கெனப் பொய்யாற்றால் தோழியர்
25 தோற்றமோர் ஒத்த மலர்கமழ் தண்சாந்தின்
நாற்றத்திற் போற்றி நகையொடும் போத்தந்
திருங்கடற் கூங்கிவரும் யாறெனத் தங்கான்
மகிழக் களிப்பட்ட தேன்றேறன் மாற்றிக்
குருதி துடையாக் குறுகி மருவினியர்
30 பூத்தன ணங்கை பொலிகென நாணுதல்
வாய்த்தன்றால் வையை வரவு;
மலையின் இழியருவி மல்கிணர்ச் சார்ச்சார்க்
கரைமரஞ் சேர்ந்து கவினி மடவார்
நனைசேர் கதுப்பினுள் தண்போது மைந்தர்
35 மலர்மார்பிற் சோர்ந்த மலரிதழ் தாஅய்
மீனாரம் பூத்த வியன்கங்கை நந்திய
வானம் பெயர்ந்த மருங்கொத்தல் எஞ்ஞான்றும்
தேனிமிர் வையைக் கியல்பு;
கள்ளே புனலே புலவியிம் மூன்றினும்
40 ஒள்ளொளி சேய்தா ஒளிகிளருண் கட்கெண்டை
பல்வரி வண்டினம் வாய்சூழ் கவினொடும்
சென்னீர் வீவயிற் றேன்சோரப் பன்னீர்
அடுத்தடுத் தாடுவார் புல்லக் குழைந்து
வடுப்படு மான்மதச் சாந்தார் அகலத்தான்
45 எடுத்தவேய் எக்கி நூக்குயர்பு தாக்கத்
தொடுத்ததேன் சோரும் வரைபோலுந் தோற்றம்
கொடித்தேரான் வையைக் கியல்பு:
வரையார்க்கும் புயல்கரை
திரையார்க்குமித் தீம்புனல்
50 கண்ணியர் தாரர் கமழ்நறுங் கோதையர்
பண்ணிய வீகைப் பயன்கொள்வா னாடலால்
நாணா ளுறையு நறுஞ்சாந்துங் கோதையும்
|
|