ஒருங்கு கூடி நீராடாநின்ற மதுரையிடத்து
நீர்த்துறை தோறும்
வாராநிற்கும்;
(வி-ம்.) வையையில் வெள்ளம் வந்த வருகையின்கண்
நீர்
தோன்றல் ஈகை போன்ம் எனக் கறி முதலியவற்றை அலையானே
கரையின் எவ்வயினானும் மீதுமீது வீசி அதனை அழியாநிற்கும்.
வலஞ்சுழித் தோடும் அக் கலங்கலம்புனல் தான் வரும்வழியில்
ஊர்தொறும் துறையில் ஆடுவார் முத்துநேர்பு புணர்காழ்
முதலியனவாகத் தான் உந்தியவற்றைப் புதல்வர் முஞ்சமொடு
தழீஇக்கொண்டு மதுரையிடத்தே கண்ணார் துணையோடாடும்
தலைத்தலைவரும் என இயைபு காண்க.
இப் பகுதியின்கண் பிரித்துக் கூட்டப்பட்டவற்றையும்
அவாய்
நிலையான் வருவித்துக் கூறப்பட்டவற்றையும் உணர்க.
கைவண் தோன்றல் - கைவண்மையிற் சிறந்த தலைவனாகிய
பாண்டியன் என்க. தோன்றல் - தலைமைத்தன்மையுடையோன்;
யாவரினும் மிக்குத் தோன்றுபவன் என்பது பொருள். மை - முகில்
சிலம்பு - மலை; ஈண்டுச் சையமலை என்க. கறி - மிளகு சாந்து -
சந்தனமரம். நெய் - வெண்ணெய். வெண்ணெய் குடைதற்குக்
காரணமான தயிர் என்க. தயிர் நுரைக்கு உவமை. பிறவென்றது. பிற
மரஞ் செடிகொடிகளும் மலர் காய்கனி பொன்மணி முதலியனவும் என்க.
எவ்வயினானும் - எவ்விடத்தும்: அழிக்கும் எனற்பாலது அழியும் என
நின்றது. நேர்தல் - தம்முள் உருவொத்தல்: நேர்பு முத்துப்புணர் என
மாறுக. காழ் - வடம். மத்தக நித்திலம் - தலைக் கோலமாகிய
முத்தணிகலன்.
திணைபிரிபுதல்வர் என்றது, வீட்டினின்றும் தமியராய்ச்
சென்ற
சிறார் என்றவாறு. வலஞ்சுழி கலங்கல் அம்புனல் என மாறுக. உந்திய:
பலவறிசொல்; உந்தப்பட்டவற்றை முஞ்சமொடு தழுவி எனக் கூட்டுக.
கயந்தலை - மெல்லிய தலை. முஞ்சம் - ஒருவகைத் தலைக் கோலம்.
அரி தத்து கண்ணார் என மாறுக. செவ்வரி கருவரி ஓடிய
கண்ணையுடைய மகளிர் என்க. இவர் மதுரைக்கண் வையைத்துறையில்
ஆடுவோர்.
வையைநீர் வழியிலுள்ள துறைதொறும் ஆடுவார்
அணிகலன்களைக் கவர்ந்து மதுரைமகளிர்க்குப் பரிசிலாக ஏந்தித்
தலைத்தலை வரும் என்பது கருத்து. தலைத்தலை - துறையிடந்தோறும்
துறையிடந்தோறும் என்க.
(பரிமே.) 9. நீர்பெருகல் என்பது அவாய் நிலையான்
வந்தது.
5. தலைக்கோலமுத்து.
7. இல்வாயில் போந்து நீராடும் புதல்வர். திணைபிரிதல்
-
இல்லினின்று சேறல்.
11 - 19: செறுவே . . . . . .. பூத்தன்று
(இ-ள்.) செறு - கழனிகள், விடுமலர் சுமந்து பூநீர்
நிறைதலின்
- மலர்ந்த பூக்களைச் சுமந்து பொலிந்த வையை நீர் புக்கு |
|
|
|