பக்கம் எண் :

பரிபாடல்- வையை 268

வாய் - மலரின் வாய் என்க. செல்நீர் - கூந்தலினின்றும் நீங்கும் நீர்மை
என்க. வீ - பூ. பன்னீர் - மிக்கநீர். மிக்கநீரைப் பன்னீர் என்றும்
சிறிதாகிய நீரைச் சின்னீர் என்றும் கூறுதல் வழுவமைதியாகக் கொள்க.
இங்ஙனம் எப்போதும் நீராடுதல் நினக் கியல்பென்பாள் வையையின்
மேலேற்றி 'வையைக் கியல்பு' என்றாள். இப்பகுதியில் அவாய்
நிலையானும் தகுதியானும் வருவித்துரைக்கப் பட்ட சொற்களை
ஆராய்ந்துணர்க.

கொடித்தேரான் என்றது, பாண்டியனை. கொடி - மீன்கொடியுமாம்.

(பரிமே.) 40. கெண்டைநிறம் சிவக்க எனப் பண்பின்றொழில்
பொருண்மேல் நின்றது. (அஃதாவது கெண்டையின் நிறம் சிவக்க
எனற்பாலது, கெண்டை சிவக்க எனப்பட்டது என்றவாறு.)

48-49: வரை . . . . . . . . தீம்புனல்

(இ-ள்.) புயல் வரை ஆர்க்கும் - முகில் மலையின் கண்ணே
முழங்காநிற்கும் அவ்வளவிலேயே, இத் தீம்புனல் திரை கரை ஆர்க்கும்
- இவ்வியல்புகளையுடைய வையையின்கண்ணே பெருகா நிற்கும் இனிய
நீரின் அலைகள் கரையின்கண்ணே மோதி ஆரவாரியா நிற்கும்;

(வி-ம்.) இது வையையின் சிறப்புக் கூறியபடியாம்.

(பரிமே.) திரைக்கரைக்கண்ணே ஆராநிற்கும்.

இவ்வளவும் தோழி தன்னுள்ளே கூறுவாளாய்ப் புனலாடிய வரலாறு கூறி,
மேல் வையையை நோக்கிக் கூறுவாளாய் வாயின் மறுக்கின்றாள்.

50-55: கண்ணியர் . . . . . . . நினக்கு

(இ-ள்.) (55) வையை - வையையே!, கண்ணியர் தாரர் - தலையிடத்தே
மாலையுடையராய் மார்பிடத்தே மாலையுடையராய் மைந்தர்களும், கமழ்
நறும் கோதையர் - நறுமணங்கமழும் மலர் மாலைகளையுடையராய்
மகளிரும், பண்ணிய ஈகைப் பயன்கொள்வான் நாள்நாள் ஆடலால்
- பொருள்களைத் தானம் பண்ணி அதன் பயனாகிய போகத்தை
நுகரவேண்டி நாள்தோறும் நின்னிடத்தே நீராடுதலாலே, உறையும்
நறுஞ்சாந்தும் கோதையும் பூத்த புகையும் அவியும் புலராமை - அவர்
நினக்குக் கொணரும் கையுறையாகிய பொன் மீன் முதலியனவும் அவர்
அணிந்த நறிய சந்தனக்குழம்பு முதலியனவும் அவர் ஈரணி உலர்த்தும்
பொலிவுற்ற அகிற்புகையும் நினக்குத் தரும் உண்டியும் குறையாமல்
நிறைதற்பொருட்டு, வான மறாஅற்க - முகில்மழை மறாது நிரம்பப்
பெய்வதாக, நினக்கு நீத்தம் மலிதந்து