அறா அற்க - நினக்கு அம் மழையினாலே உண்டான வெள்ளம்
பெருகி என்றும் வற்றாது நிறைவதாக.
(வி-ம்.) கண்ணி - தலையிற்சூடும் மாலை. தார்-
மார்பிலணியும்
மாலை. கோதை - மாலை; பெரும்பாலும் மகளிர் அணியும் மாலையையே
இச்சொல் குறிக்கும். ஈகைபண்ணி அதன் பயன் கொள்ளும்பொருட்டு
ஆடலால் என்க. நாள்நாள் - நாள்தோறும். கையுறை - பொன்மீன்
பொன்னண்டு பொன்னிறவு முதலியன. பூத்த - பொலிந்த. புகை -
நறுமணப்புகை. அவி - தெய்வத்திற்கிடும் உண்டி. புலராமை -
இப் பொருள்கள் சுருங்காமைப் பொருட்டு. மறாஅற்க - மறாதொழிக.
அறாஅற்க - வற்றாதொழிக. வையை: அண்மை விளி.
இங்ஙனம் கூறித் தலைவனை நினது பரத்தைமையை யாங்கள்
நன்கறிந்தோம். இவ் வையைவெள்ளம் அறாதாக நீ இன்னும் அவரோடே
ஆடப் போதலே நன்றென்று தோழி குறிப்பாலே வாயில் மறுத்தமை உணர்க.
(பரிமே.) 51. ஈகை - தானம். பயனாகிய போகத்தை
நுகர வேண்டி.
52. கையுறையாகிய பொன்மீன் முதலியனவும்
53. ஈரணிபுலர்த்தும் பொலிந்த புகையும்
|
|