தேயாமண்டிலம் - ஞாயிற்று மண்டிலம். திங்கள் மண்டிலம்
தேயு மண்டிலமாகலின் இது 'தேயா மண்டிலம்' எனப்பட்டது.
அசைபு - தங்கி. ஒத்தார் - அன்புடைமையில் ஒத்தவர்
என்க.
தகை - அழகு. பாய்பு - பாய்ந்து.
அனைய என்றது மேலே கூறுகின்றவற்றைக் கூட்டி.
(பரிமே.) 28. வாய்மை - புகழ். வேள்வி - பூசை.
29. நாறிய - பரந்த.
30. முருகன் ஆவியாகக் கொள்ளும் அகிற்புகை.
32. ஆதித்தமண்டிலம்; தேயா மண்டிலம் என்றார்.
ஏனை
மண்டிலம் தேய்தலின்.
40-46: கீழோர் . . . . . . . . நன்று
(இ-ள்.) வால் வெள் அருவி ஆனாது பரந்து கீழோர்
வயல்
பரக்கும் - அக் குன்றினின்று வெள்ளிய அருவி இடையறாது ஒழுகி
உழவருடைய வயல்களிலே பரவும், மேலோர் இயங்குதலால் வீழ்
நீலமணிசெறு உழக்கும் - அக் குன்றின் மேலே விளையாடு மகளிர்
இயங்குதலாலே அவர் அணிகலத்தினின்று வீழ்ந்த நீலமணிகள்
அவ் வருவியோடு வந்து அவ் வயல்களைச் சிதையாநிற்கும்,
அவ் வெள் அருவி அணி பரங்குன்றிற்கும் - அவ் வெள்ளிய
அருவியாலே அழகு செய்யப் பெற்ற திருப்பரங்குன்றின்கண்
தெய்வ விழவும் - தலைவியர் தம்மைப் பிரிந்து சென்ற தலைவர்
விரைவின் மீண்டு வருதற் பொருட்டுச் செய்யும் தெய்வவிழாவும்,
தொய்யா விழு சீர் வளங்கெழு வையைக்கும் - அங்ஙனமே
அத் தலைவர் மீண்டு வந்து தம்மைக் கூடியவழி கெடாத
பெரும்புகழையுடைய வளம் பொருந்திய வையையாற்றின்கண்
அத் தலைவியர் மகிழ்ச்சி காரணமாகச் செய்யும், திருந்து விருந்து
அயர்வும் - திருந்திய புதுப்புனலாட்டும். கொய்யுளை மான் தேர்க்
கொடித்தேரான் கூடற்கண் திருந்து விருந்து அயர்வும் -
அத் தலைவியர் பின்னர்த் தந்தலைவர் கொணர்ந்த பொருளானே
ஏனைய அரசருடைய கத்தரிகையால் மட்டம் செய்யப்பட்ட
பிடரிமயிரையுடைய குதிரை பூட்டிய தேர்களாலே சூழப்பட்ட
மீனக் கொடியை உடைய தேரினை உடைய பாண்டியனது
மதுரையிடத்தே தம்மில் இருந்து பகுத்துண்ணும் திருந்திய
விருந்தோம்பலும், கை ஊழ் தடுமாற்றம் நன்று - தம்மில் காரண
காரியங்களாய்த் தடுமாறி வருதல் இல்லறநெறியே ஆதலின், அவர்க்கு
நல்லொழுக்கமாயிற்று; |
|
|
|