பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்281

"என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பொருள்"
என்றும்,
"கொள்ளும் பயனில்லை குப்பை கிளர்ந்தென்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும்வாய்மை இழக்கும் புலவீர்காள்"
என்றும்,
"வம்மின் புலவீர் நும்மெய்வருத்திக் கைசெய்து உய்மினோ"
என்றும்,
"மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே"
(திருவாய்மொழி, 3: 9 )

"தம்மை யேபுகழ்ந் திச்சைபேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே யெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்"
என்றும்,
"வஞ்ச நெஞ்சனை மாசழக்கனைப் பாவியைவழக் கில்லியைப்
பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று பாடினுங் கொடுப் பாரிலை
பொன்செய் செஞ்சடைப் புண்ணியன்புக லாரைப்பாடுமின் புலவீர்காள்
நெஞ்சினோயறுத் துஞ்சுபோவதற் கியாதுமையுற வில்லையே"
(சுந்தரர் தேவா, பதிகம், 43: 1; 5.)

என்றும் நிகழும் செவியறிவுறூஉவினை ஒப்பு நோக்குக.

      பாடுதும் தொழுதும் என்பன முற்றெச்சங்கள். ஏமவைகல் - இன்ப முறுவைகல்.

      (பரிமே.) 50: மக்கண்மாட்டுப் பணிமொழியை ஒழிந்து.

      53. பிறவித்துன்பம் சாராத வைகல்.