(வி-ம்.) தருக்களிடத்தே தண்டளிரைப்படுத்து என்க; முகில் தன்
பெயலாலே மரங்களைத் தளிர்க்கச்செய்து அச் செயலை உலகத்திற்கு
எடுத்தோதுவது போன்று முழங்கிற்று என்றவாறு. இது, தற்குறிப்பேற்றம்
என்னும் அணி. மங்குல் - இருள்; இருண்ட மழை என்க. மழை,
முகிலுக்கு ஆகுபெயர். விறல் - வெற்றி. வரை - ஈண்டுச் சிகரம்.
ஆல்: அசைகள். முகில் முழங்கிய சிகரத்திற்குக் களிறும் அதன்
ஓடைக்குக் கொடிமின்னலும் உவமை, எதிர் நிரனிறை. இருள் இடந்து
போழும் என மாறுக. நெருங்கிய கொடிகளையுடைய மின்னல் என்பார்
'அடர்ந்து' என்றார். இடந்து - பெயர்த்து. வேல் வேள் - முருகவேள்.
தேரின்மேல் வரும் உலக ஞாயிறல்லாத கடவுள் ஞாயிறே என்பார்
'மயில்மேல் வரும் ஞாயிறு' என்றார். எழுதெழிலம்பலம் - ஓவியம்
வரையப்பட்ட அழகையுடைய திருக்கோயில் என்க. காமவேள்
அம்புத்தொழில் பயிலும்சாலை என்றது. கண்டோர் விருப்பத்தை மேல்
மேலும் எழுப்புதல்பற்றி. நகர் - வீடு: ஈண்டுச் சிலம்பக்கூடம்.
சிரமச்சாலை - சிலம்பக்கூடம்; படைக்கலம் பயிலிடம்.
(பரிமே.) '. . . . . .த்துமின்னும் வழக்குநோக்கி.
. .. . . . .அம்பின்
தொழில்' என்றார்.
மழைக்கு முழக்கங் கூறினமையின் யானைக்கும் முழக்கம்
கொள்ளப்படும்.
30 - 37: ஆர்ததும்பு . . . . . . . .போன்றன கை
(இ-ள்.) சூர் ததும்பு வரைய கா - இக் குன்றத்தின்கண்
தீண்டிவருத்தும் தெய்வங்கள் நிறைந்த சிகரங்களிடத்தவாகிய
சோலைகளும், கார்ததும்பு நீர்ததும்புவன சுனை - மேகங்கள் துளித்த நீர்
நிறைந்து துளும்புவனவாகிய சுனைகளும், பூஅணி செறிவு - மலர்களை
அணிந்த செறிவினாலே, ஏர்ததும்புவன - அழகு துளும்புகின்றவை, ஆர்
ததும்பும் அயில் அம்பு நிறை நாழி - அழகு ஒழுகும் கூர்த்த மலர்
அம்புநிறைந்த அம் மன்மத வேளின் ஆவ நாழிகையை ஒக்கும், கார்
தோற்றும் காந்தள் செறிந்த கவின் - கார்ப்பருவத்தாலே
தோன்றுவிக்கப்பட்ட காந்தட்குலைகள் நெருங்கிய அழகாலே, போர்
தோற்றுக் கட்டுண்டார் கைபோல்வ - அக் காமவேளின் போரிலே
தோற்றுக் கட்டுண்டவருடைய கைகளை ஒத்தன, தும்பி கட்டு அவிழ்ப்ப
கவின்முகை - வண்டுகளாலே அலர்த்தப்படுவனவாகிய அழகிய
காந்தளரும்புகள், கட்டு யாழின் புரிநெகிழ்ப்பார் கைபோன்றன - கட்டு
தலையுடைய யாழின் நரம்பினது புரியை நெகிழ்ப்பவருடைய கைகளை
ஒத்தன;
(வி-ம்.) அக் குன்றத்தின்கண் உள்ள காவும் சுனையும்
தம்பால்
நிரம்பிய மலர்களை உடைமையால் ஆவநாழிகையை ஒத்தன; செறிந்த
காந்தட்குலை கட்டுண்டார் கையை ஒத்தன; வண்டலர்த்திய முகை
யாழ்நரம்பின் புரியவிழ்ப்பார் கையை ஒத்தன என்றவாறு.
ப.--19 |
|
|
|