ஆர் - அழகு: இதற்கிப்பொருளுண்மை
ஆசிரிய நிகண்டில் (8-9) காண்க.
மலரம்பு என்பது தோன்ற 'ஆர்ததும்பு அயிலம்பு' என்றார்.
எய்யப்பட்டார் உளத்தே தப்பாது ஊடுருவிச் செல்லுதலாலே
மலரம்பிற்கும் கூர்மை கூறினார். அயில் - கூர்மை.
நாழி - ஆவநாழிகை: அம்புத்தூணி. சூர் - தீண்டி வருத்தும்
தெய்வம்: சூரரமகளிர். திருப்பரங்குன்றத்தே சூரரமகளிர் நிறைந்திருப்பர்
என்பதனை,
"கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச்
சூரர மகளிர் ஆடுஞ் சோலை"
(திருமுரு. 38-41)
என ஆசிரியர் நக்கீரனார் ஓதுமாற்றானும் உணர்க.
கார் - முகில்: ஆகுபெயர். கார் ததும்புதலாலே நீர்ததும்பு
சுனை
என்க. அம் மதவேளின் போரில் தோற்று என்க. கட்டவிழ்த்தல் - கிண்டி
அலர்த்துதல்: கைபோன்றன என மாறுக.
(பரிமே.) உவமை (36-37) மலராது குவியாது இடையதாகிய
நிலைமைபற்றி நின்றது.
38 - 45: அச்சிரக்கால் . . . . . . குன்றம்
(இ-ள்.) அணிமழை அச்சிரக்கால் ஆர்த்து வச்சிரத்தான்
வான்
வில்லுக் கோலின்று - அழகிய மேகம் முன்பனிக் காலத்தே முழங்கி
வச்சிரப்படையையுடைய இந்திரனது வானவில்லை வளைத்தது,
வல்லுப்போர் வல்லாய் - சூதுப்போர் வல்ல முருகவேளே!, மலைமேல்
மரம் வில்லுச்சொரி பகழியின் மென் மலர் தாயின - நினது மலையின்
மேலுள்ள மரங்கள் அவ் விந்திர வில் சொரியும் அம்புகள் உளவாயின்
அவ் வம்புகள் பரக்குமாறு போல மெல்லிய மலர்களை யாண்டும்
பரப்பின, வட்டு உருட்டு வல்லாய் - சூதுப்போரின்கண் உருண்டை
உருட்டுதற் றொழிலில் வல்ல பெருமானே!, மலைய குன்றம் - நினது
மலையிடத்துக் கோட்டத்தின்கண், போர் ததும்பும் அரவம்போல -
போரின்கண் மிக்கெழாநின்ற முழக்கம்போல, கருவி சீர்ததும்பு
அரவமுடன் சிறந்து ஆர்ப்ப - இசைக்கருவிகள் தாளம் ஒலிக்கும்
ஒலியோடியைந்து சிறப்புற்று முழங்காநிற்ப, கருவி நின்றன - மேகத்
தொகுதியும் அம் முழக்கத்தோடொத்து முழங்கிநின்றன;
(வி-ம்.) அச்சிரம் - முன்பனிக்காலம்: காலம்
என்பது அம்மீறு
கெட்டு அத்துச்சாரியை பெறாமல் காலார்த்து எனப் புணர்ந்து நின்றது.
மழை - மேகம்: ஆகுபெயர். வச்சிரத்தான் - இந்திரன். வானவில்லினை
இந்திரவில் என்னும் வழக்குப்பற்றி 'வச்சிரத்தான் வானவில்லு' என்றார்.
கோலின்று - கோலிற்று: வளைத்தது. |
|
|
|