பத்தொன்பதாம் பாடல்
--------
செவ்வேள்
பொருட்சுருக்கம்
குருகுபெயர்க் குன்றம் எறிந்த வேற்படையேந்திய செவ்வேளே!
1 - 7: வானவர் உலகத்திலே நீ எழுந்தருளியிருப்பதற்குக்
காரணமான விருப்பத்தைப்போலவே இம் மண்ணுலகத்தும் எழுந்தருளும்
விருப்பம் உடையையாகி, அறிவெல்லையாலே அறியப்படாத
கடப்பமரத்தை மேவி, அவ்வானவர் எய்தும் இன்பத்தை இம்
மண்ணவரும் எய்துக என்று திருவுளங் கொண்டு நீ எழுந்தருளியிருக்கும்
திருப்பரங்குன்றத்தின் கண்ணே, வள்ளியை மணம்புரிந்தருளியது, நீ
வானவர்பால் தேவசேனையை மணந்தாற் போன்று இம் மண்ணவர்
மகளொருத்தியையும் மணந்து இவருடன் உறவுகொள்ளுதல் வேண்டும்
என்ற கருத்தாற் போலும்.
8 - 19: அறிவுப் போராலும், மறப்போராலும் பிறரை
வெல்லுமியல்புடைய மதுரையிலுள்ள மைந்தரும் மகளிரும் புணர்ச்சி
யின்பத்தோடே வந்த இரவு கழிந்த வைகறைப் பொழுதின்கண்
இவ்வுலகத்தில் அறத்தைப் பெரிதாகச்செய்து அதன் பயனை
நுகரவேண்டித் தேவருலகத்திற்குச் செல்வார் போன்று தத்தமக்கு ஏற்ற
அணிகலன்களையும் ஆடைகளையும் அணிந்துகொண்டு குதிரையின்மேலும்
தேரின்மேலும் ஏறிப்போந்து நின் திருப்பரங்குன்றத்திற்கும் மதுரைக்கும்
இடை நிலனெல்லாம் நெருங்கி யாத்திரை செய்யும் வழி அவருடைய
மலர் மாலையணிந்த தலைகள் இடைவெளியின்றி நிறைதலால்,
ஒத்த மலர்களைச் செறிய வைத்துக்கட்டி நிலமகளிற்கிட்டதொரு
மாலைபோலத் தோன்றும்.
20-37: யானையையுடைய முருகவேளே! அறிவிற் சிறந்த
பாண்டியன் மகளிரோடும் அமைச்சர்களோடும் பிற மக்களோடும் நினது
மலையில் ஏறி நின் திருக்கோயிலை வலம் வந்தான்; அக் காட்சி
விண்மீன்கள் தன்னைச் சூழத் திங்கள் மேருவை வலம் வரும் காட்சியை
ஒத்தது; அம் மன்னனோடு வந்தோருட் சிலர், தலையில் பரிவட்டங்
கட்டியிருந்தனர்; பலர் |
|
|
|