35 பரிநிமிர் தானையான் பாசறை நீர்த்தே
குருகெறி வேலோய்நின் குன்றக்கீழ் நின்ற
இடைநிலம் யாமேத்து மாறு;
குரங்கருந்து பண்ணியங் கொடுப்போரும்
கரும்பு கருமுகக் கணக்களிப் போரும்
40 தெய்வப் பிரமஞ் செய்கு வோரும்
கைவைத் திமிர்புகுழல் காண்கு வோரு
மியாழின் இளிகுரல் சமங்கொள் வோரும்
வேள்வியின் அழகியல் விளம்பு வோரும்
கூர நாண்குரல் கொம்மென வொலிப்ப
45 ஊழுற முரசின் ஒலிசெய் வோரும்
என்றூ ழுறவரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை யுள்படு வோரும்
இரதி காமன் இவளிவன் எனாஅ
விரகியர் வினவ வினாவிறுப் போரும்
50 இந்திரன் பூசை இவளக லிகையிவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
ஒன்றிய படியிதென் றுரைசெய் வோரும்
இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்
துன்னுநர் சுட்டவுஞ் சுட்டறி வுறுத்தவும்
55 நேர்வரை விரியறை வியலிடத் திழைக்கச்
சோபன நிலையது துணிபரங் குன்றத்து
மாஅன் மருகன் மாட மருங்கு;
பிறந்த தமரிற் பெயர்ந்தொரு பேதை
பிறங்கல் இடையிடைப் புக்குப் பிறழ்ந்தியான்
60 வந்த நெறியு மறந்தேன் சிறந்தவர்
ஏஎ யோஒ எனவிளி ஏற்பிக்க
ஏஎ யோஒவென் றேலா அவ்விளி
அவ்விசை முழையேற் றழைப்ப அழைத்துழிச்
செல்குவள் ஆங்குத் தமர்க்கா ணாமை
65 மீட்சியுங் கூஉக்கூஉ மேவு மடமைத்தே
வாழ்த்துவப்பான் குன்றின் வகை;
நனிதுனி நயவரு சாய்ப்பின் நாறிணர்ச்
சினைபோழ் பல்லவந் தீஞ்சுனை யுதிர்ப்ப
|
|