கீழே கிடந்த இடைநிலப்பரப்பு,
தும்பி தொடர் கதுப்ப தும்பி வாங்கி
தொடர் ஆட்டி - யானைப்பாகர்கள் மதமுண்ணும் பொருட்டு வண்டுகள்
தொடராநின்ற கவுளையுடைய யானைகளை வழியினின்றும் அகற்றி
அவற்றின் காலின்கட் சங்கிலியை ஆட்டி, வம்பு அணி பூங்கயிற்று மரன்
அசைப்பார் - கச்சணிந்த புரசைக்கயிற்றாலே மரங்களிலே கட்டுவர்,
கண்டக்கரும்பு கவழம் மடுப்பார் - அவற்றிற்குக் கண்டமாக முறித்த
கரும்பினை உணவாக ஊட்டாநிற்பார், வண் தார்ப்புரவி வழிநீங்க
வாங்குவார் - குதிரைப்பாகர் வளவிய மாலைகளையுடைய குதிரைகளை
வழியினின்று அகலும்படி அகற்றாநிற்பர், திண்தேர் வழியின்
செல 'நிறுப்பார் - தேர்ப்பாகர் திண்ணிய தேர்களை வழியினின்றும்
அப்பாற்செல்லும்படி ஊர்ந்து கொடுபோய் நிறுத்துவர், நிரந்து பரி நிமிர்
தானையான் பாசறை நீர்த்து - அவ்வியானை முதலியன இவ் வாற்றால்
யாண்டும் பரக்கப்பட்டுப் பகைமேற் செலவின்கண் மிக்குச் செல்லும்
படைப்பெருக்கினையுடைய அப் பாண்டியனது பாசறையினது
தன்மையினை உடையதாயிற்று, யாம் ஏத்தும் ஆறு - யாம் அவ் விடை
நிலத்தை உவமையால் உயர்த்துக் கூறுமுறை இம் முறையே பிறிது
கண்டிலேம்;
(வி-ம்.) வேலோய் நின் குன்றின்கீழுள்ள இடைநிலம்
யானைகளைக் கட்டலானும், குதிரைகளை வாங்குதலானும், தேர்களை
நிறுத்தலானும், அவை யாண்டும் பரக்கப்பட்டுப் பாண்டியனுடைய
பாசறையே ஒத்தது என்றவாறு.
தும்பி இரண்டனுள் முன்னது வண்டு; பின்னது யானை. தொடர்
- சங்கிலி. வம்பு - கச்சு. கயிறு - புரசைக்கயிறு. கவழம் - கவளம்:
யானைக்கிடும் உணவு. பரி - செலவு: போர்மேற் செல்லும் செலவென்க.
நிமிர்தல் - மண்டிச்சேறல். ஒன்றற்கு உவமை கூறுங்கால் பொருளினும்
உவமை உயர்ந்ததாதல் வேண்டும் எனச் சான்றோர் கூறுவர். யாங்கள்
இவ் விடைநிலக் காட்சிக்கு உவமை தேர்ந்து கூறுங்கால் அதுவும்
அப் பாண்டியனது பாசறைக்காட்சியல்லது உயர்ந்த உவமை பிறிது
காணாமையின் அதனையே உவமை கூறினேம் என்பார், 'யாம்
இடைநிலம் ஏத்தும் ஆறு இதுவே' என்றார்.
(பரிமே.) அவை கூடலினின்றும் போந்து குன்றின்மேல்
ஏறாவாய்
இடையே நிற்றலின் இடைநிலம் . . . .. . . . . . . .. பு.
36. குருகு: ஆகுபெயர்.
37. 'யாம் அவ் விடைநிலத்தை உயர்த்துக் கூறுமாறு
இது' என்றது
உவமையால் உயர்க்குங்கால் அதுவும் அவன் பாசறையல்லது பிறிதில்லை
என்னும் நினைவிற்று. இது என்னும் சொல் வருவிக்கப்பட்டது.
இனி முருகவேளைப் படர்க்கையாக்கி மேல் வழுதியுடன்
ஏறியோரது வினோதம் கூறுவாராய் மலைச்சிறப்புக் கூறுகின்றார்:-
ப.--20. |
|
|
|