பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்306

38-45: குரங்கு . . . . . . . . . ஒலி செய்வோரும்

      (இ - ள்.) குரங்கு அருந்தும் பண்ணியம் கொடுப்போரும் -
இனிப் பாண்டியனோடு மலைமேலேறி வலம்வந்த மாந்தருட் சிலர்
குரங்குகள் உண்ணும் இயல்புடைய பண்ணிகாரங்களை அவற்றிற்குக்
கொடாநிற்பார், கருமுகம் கணக்குக் கரும்பு அளிப்போரும் - சிலர்
கரிய முகமுடைய முசுக்கலைத்திரளுக்கு உணவாகக் கரும்பினைக்
கொடுப்பார், தெய்வப்பிரமம் செய்குவோரும் - வேறுசிலர்
தெய்வத்தன்மையுடைய பிரமவீணையினின்றும் இசையெழுப்பாநிற்பர்,
கைவைத்து இமிர்பு குழல் காண்போரும் - சிலர் விரல்களைத்
துளையிடத்தே வைத்து ஊதி வேய்ங்குழலின் இசையை அளவாநிற்பர்,
யாழின் இளிகுரல் சமம்கொள்வோரும் - சிலர் யாழின்கண்
இளிவாய்ப்பாலையையும் குரல்வாய்ப்பாலையையும் வலியவும்
மெலியவுமாகத் தாக்காமல் சமனாகத் தாக்கி அதன் இன்பத்தை
நுகராநிற்பர், வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும் - சிலர்
முருகவேளுக்கு நிகழ்த்தாநிற்கும் பூசையினது அழகினது தன்மையைப்
புகழாநிற்பர், கூரம் நாண்குரல் கொம்என ஒலிப்ப ஊழ் உற முரசின்
ஒலிசெய்வோரும் - வேறுசிலர் யாழினது நரம்பின் இசை கொம்மென்று
ஒலித்த அளவிலே அத் தாளத்தோடு பொருந்தும்படி முரசின் ஒலியை
எழுப்பாநிற்பர்;

      (வி - ம்.) பண்ணியம் - பண்ணிகாரம். முசு - ஒருவகைக் குரங்கு.
கணத்திற்கு எனற்பாலது அத்துச்சாரியை பெறாமல் 'கணக்கு' என நின்றது.
கணம் - திரள். பிரமம் - ஒருவகை வீணை. இமிர்பு - ஊதி.
கேட்போரும் என்னாது காண்குவோரும் என்றமையால் "இசையை
அளப்போரும்" என்றார் உரையாசிரியர். இளிகுரல் என்பன எழுவகை
இசைகளுள் இரண்டிசைகள்.

      இளிகுரல் என்பன அவற்றாலாய பண்களுக்கு ஆகுபெயர்.

      இளி - இளி குரலாகப் பிறந்த அரும்பாலை என்னும் பண் என்க.
குரல் - குரல் குரலாகப் பிறந்த செம்பாலைப்பண் என்க. இதனை,

      இனி, வட்டப்பாலை இடைமுறைத் திரிபு கூறுகின்றார் --
'குன்றாக்குரல் பாதி தாரத்திலொன்று, நடுவண் இணை கிளை யாக்கிக்
- கொடியிடையாய், தாரத்தில் ஒன்று விளரிமேல் ஏறடவந், நேரத்ததுகுரலா
நின்று. என்னின் உழை குரலாகிய கோடிப்பாலை நிற்க
இடமுறை திரியுமிடத்துக் குரல் குரலாயது செம்பாலை; இதனிலே
குரலிற்பாதியும் தாரத்தில் ஒன்றும் இரண்டின் அந்தரத்திலே
கிளையாக்கித் தாரத்திலே நின்ற ஓர் அலகை விளரியின்மேல் ஏறட
விளரி குரலாய்ப் படுமலைப் பாலையாம்; இம்முறையே துத்தம் குரலாயது
செவ்வழிப்பாலையாம்; இளி குரலாயது அரும்பாலையாம்; கைக்கிளை
குரலாயது மேற்செம்பாலையாம்; தாரம் குரலாயது விளரிப்பாலையாம்
என அந்தரம் ஐந்தும் நீக்கி உறழ்ந்து கண்டுகொள்க. இவ்விடத்தில்
தாரநரம்பின் அந்தரக்கோலைத் தாரம் என்றது, 'தன்னமுந் தாரமுந்
தன்வழிப் படர' என்னும் சூத்திர