விதியான் என்க. இவ்வேழு பெரும்பாலையினையும்
முதலடுத்து நூற்று
மூன்று பண்ணும் பிறக்கும்; அவற்றுள் செம்பாலையுட் பிறக்கும் பண்கள்:-
பாலையாழ், நாகராகம், ஆகரி, தோடி, கௌடி, காந்தாரம்,
செந்துருத்தி, உதயகிரி என இவை" எனவரும் அடியார்க்கு நல்லார்
உரையானும் உணர்க. (சிலப் - வேனிற் - 35. விளக்கவுரை)
தாக்குதல் - இசைத்தொழில் எட்டனுள் ஒன்று. வலிவு
மெலிவு
சமன் என்பன ஆளத்தியின் பாகுபாடுகள் பதினொன்றனுள் சில. இவை
பற்றிப் பதினேழாம் பாடல் 18-ஆம் அடியின் விளக்கத்தில் கூறிப்
போந்தாம், ஆண்டுக் கண்டுகொள்க.
வேள்வி - பூசனை. கூரம் - யாழ். 'கொம்' இசைக்குறிப்பு.
(பரிமே.) 42. யாழின்கண் இளிவாய்ப்பாலையையும்
குரல்வாய்ப்
பாலையையும் வலியவும் மெலியவுமாகத் தாக்காது சமனாகத் தாக்கி
அதன் இன்பத்தைக் கொள்வோரும்.
46 - 57: என்றூழ் . . . . . . . . . மருங்கு
(இ - ள்.) (57) மால்மருகன் பரங்குன்றத்து துணி
எழுத்து நிலை
மண்டபம் துன்னுநர் - இவர்கள் செயல் இங்ஙனமாக அவருள் சிலர்
திருமால் மருகனாகிய முருகன் எழுந்தருளிய அத் திருப்பரங்குன்றத்துத்
தெளிந்த ஓவியம் வரைந்து நிற்றலையுடைய மாடத்தின் பக்கம்
சென்றாராக அவருட் சிலர், இருசுடர் நேமி ஒன்றிய என்றூழ் உறவரும்
சுடர்நிலை உள்படுவோரும் - நாண்மீன்களையும் தாரகைகளையும்
உடைய சுடர்ச் சக்கரத்தைப் பொருந்தி ஞாயிறு முதலாக வரும்
கோள்களினது நிலைமையை விளக்கி ஆண்டுத் தீட்டப்பட்ட ஓவியத்தைக்
கண்டு உணர்ந்து கொள்ளாநிற்பர், விரகியர் வினவ - காமவேட்கை
யுடைய தம் மனைவிமார் ஆண்டுத் தீட்டப்பட்ட ஓவியங்களைக்
காணுந்தோறும் இப் பெண்ணுருவம் யாருடையது இவன் யார் இது யார்
என்று தம்மை வினவுந்தோறும் கணவன்மார், இவள் இரதி இவன் காமன்
- இவ்வோவியம் இரதியின் ஓவியம் இவன் அவள் கணவனாகிய
காமவேள், இந்திரன் பூசை - இப் பூனையுருவம் இந்திரன் மேற்கொண்ட
பூனையுருவம், இவள் அகலிகை - இதோ நிற்பவள் அவ் விந்திரனாற்
காமுறப்பட்ட கௌதமன் மனைவியாகிய அகலிகையாவள், இவன் சென்ற
கௌதமன் - இதோ சிறிது சேய்மை யினிற்கின்ற இத் துறவிதான்
இந்திரனுடைய சூழ்ச்சியாலே அகலிகையைத் தனியேவிட்டு யாற்றிற்குச்
சென்ற கௌதமன் என்பவன், இது சினன் உறக் கல் உரு ஒன்றியபடி
எனாஅ - இதோ வீழ்ந்து கிடக்கின்ற பெண்ணுருவம் அக் கௌதமன்
சினந்து சாபமிடுதலானே அவ் வகலிகை கல்லா |
|
|
|