பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்310

பின் சினைபோழ் நனி நயவரு நாறு இணர்ப் பல்லவம் தீம் சுனை
உதிர்ப்ப - சிலமகளிர் சுனையினருகே நின்று சுனைப்பக்கமாகத்
தலைசாய்த்தலை யுடையவாகிய மரக்கிளைகளிலே ஏறி அக் கிளைகளைப்
போழ்ந்து புறப்பட்ட மிக விரும்பத்தகுந்த மணங்கமழா நின்ற
பூங்கொத்துக்களோடு கூடிய தளிர்களைக் கீழ் உள்ள காட்சிக்கினிய
சுனைநீரிலே விளையாட்டு வகையானே உதிர்ப்ப, உதிர்த்த அவை
சுனையின் அலர் முகிழ் உற எடுத்த தலைய கிடப்ப - அங்ஙனம்
உதிர்க்கப்பட்ட அவை அச் சுனையின்கண் உள்ள நீர்ப்பூவினையும்
அரும்புகளையும் பொருந்தி எடுத்த தலையினை உடையவாய்க் கிடப்ப,
தெரிமலர் (உறுவது) அவிர் பொறி ஐந்தலை அரவம் என - அவற்றுள்
விரிந்த 'மலரைப் பொருந்திக் கிடந்த தொன்றனை இது விளங்குகின்ற
படப்பொறியினையும் ஐந்து தலைகளையு முடையதொரு பாம்பு என்றும்,
அருகு நனை உறுவ ஒன்று மூத்த மைந்தன் ஒன்று இளம் பார்ப்பு. என
- அதன் பக்கத்திலே முதிர்ந்த பேரரும்பினையும் முதிராத
சிற்றரும்பினையும் பொருந்திக் கிடந்தன வாகிய இரண்டினுள் ஒன்று
அவ் வைந்தலையரவின் மூத்த பிள்ளையாகும் என்றும் மற்றொன்று
அதன் இளையபிள்ளையர்கும் என்றும் கருதி, இளமகளிர் -
அவ் விளைமையுடைய மகளிர், மருள - மயங்காநிற்ப;

      (வி-ம்.) நுனிசாயப்பின் சினைபோம் நனிநயவரு நாறு இணர்ப்
பல்லவம் என மாறுக. சாய்ப்பினைப் பல்லவத்திற் கேற்றுவர்
பரிமேலழகர். சாய்பு - சாய்த்தல்; இனி அலர் முகிழ்உற என்பதற்குச்
சுனையின்கண் உள்ள மலரும் அரும்பும் என்னாது பூவோடு கூடிய
பல்லவத்தையும் அரும்போடுகூடிய பல்லவத்தையும் என்று கோட்டுப்
பூவும் அரும்புமாகவே கொள்ளினும் அமையும். உதிர்த்த -
உதிர்க்கப்பட்ட. தெரிமலர் - விரிந்த மலர் என்றவாறு. நனை -
அரும்பு: தெரிமலர் உறுவது என ஒருசொல் வருவித்துக்கொள்க.
மூத்தமைந்தன் இளம்பார்ப்பு என்றதற்கியையப் பேரரும்பு சிற்றரும்பு
என வேறுபடுத்தோதப்பட்டன. மைந்தன்: மரபு வழுவமைதி. இளமகளிர்
என்றது மருள்வதற்குக் குறிப்பேதுவாய் நின்றது.

      (பரிமே.) சாய்ப்பிற் பல்லவம் என்க.

74 - 84: பாங்கர் . . . . . . குன்றின்மிசை

      (இ - ள்.) பாங்கர் - அச் சுனையின்கண்ணும் பக்கத்தினும்,
பசும்பிடி இளமுகிழ் - பச்சிலையது இளைய கொழுந்தும், வாய்
நெகிழ்ந்த ஆம்பல் - மகளிர் வாய்போல மலர்ந்த அரக்காம்பலும் பிற
நீர்ப்பூக்களும், கைபோல் பூத்த கமழ்குலைக் காந்தள் - அம் மகளிர்
கைபோன்று மலர்ந்த நறுமணங் கமழும் பூங்கொத்துக்களையுடைய
காந்தளும், எருவை நறுந்தோடு - பஞ்சாய்க் கோரையின் நறியமலர்களும்,
எரியிணர் வேங்கை - தீப்போன்று