மலரும் பூங்கொத்துக்களையுடைய
வேங்கையும், உருவம் மிகு தோன்றி -
நிறமிக்க தோன்றியும், ஊழ் இணர் நறவம் - ஊழ்த்த
பூங்கொத்துக்களையுடைய நறவமும், பருவம்இல் கோங்கம் - பருவம்
பாராமல் எப்பொழுதும் பூக்கு மியல்புடைய கோங்கும், பகைமலர்
இலவம் - அக்கோங்க மலரோடு நிறத்தால் மாறுபட்ட இலவமும்
ஆகிய இவைகள் எல்லாம், நிணந்தவை போல நிறைந்தும் - தெற்றின
மாலைகள்போல மலர்நிறைந்தும், கோத்தவைபோல உறழ்ந்தும்
- கோத்த மாலைகள் போல நிறம் மாறுபட்டும். நெய்தவைபோல
நிமிர்ந்தும் - தொடுக்கப்பட்ட மாலைகள்போல இடையிட்டும், தூக்க
மணந்தவை போலத் தொடர்ந்தும் தூக்கிக் கட்டின மாலைகள்போல
நெருங்கியும் பூத்தலானே, வரைமலை எல்லாம் விடியல் வியல்
வானம்போலப் பொலியும் - சிகரமும் மலையுமாகிய இடமெல்லாம்
விடியற் காலத்துப் பலநிறத்து மேகம் பொருந்திய வானம்போன்று
பொலிவுற்றுத் திகழாநிற்கும்;
(வி - ம்.) (84) நெடியாய் நின்குன்றின் மிசை
(74) இளமகளிர்
மருளப் பசும்பிடி ஆம்பல் முதலியன பூத்தலால், வரையும் மலையுமாகிய
இடமெல்லாம் அம் மலர்களானே வானம்போலப் பொலியும் என
இயைத்துக் கொள்க.
பசும்பிடி - பச்சிலை என்னும் பெயரையுடையதொரு கொடி.
"பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா" (70) எனக் குறிஞ்சியினும் வருதல்
காண்க. இதற்குப் 'பச்சிலைப்பூ' எனப் பொருள் கூறினர்
நச்சினார்க்கினியர். ஈண்டு மருக்கொழுந்துபோல இப் பசும்பிடி
கொழுந்திலே சிறப்புடையது என்று கருதிப்போலும் பசும்பிடி இளமுகிழ்
என்பதற்குப் பச்சிலையது இளைய கொழுந்து எனப் பொருள் கூறினர்
ஆசிரியர் பரிமேலழகர். இலையிலேயே மணமுடையது என்பது
கருதிப்போலும் இதற்கும் பச்சிலை என்பது பெயராயிற்று.
"எல்லாவற்றிலும் பசுத்திருத்தலிற் பச்சிலை என்று பெயர்பெற்றது"
என்பர் நச்சினார்க்கினியர். எருவை - பஞ்சாயக்கோரை:
கொறுக்கைச்சியுமாம். எரியிணர் - தீப்போன்று மலரும் பூங்கொத்து.
உருவம் - நிறம். ஊழ் இணர்: வினைத்தொகை. ஊழ்த்தல் - மலர்தல்.
பருவம்இல் கோங்கம் என்றது, பருவமின்றி எப்பொழுதும் மலரும்
கோங்கம் என்றவாறு. பகைமலர் அக் கோங்கமலரோடு மாறுபட்ட
நிறமுடைய மலர் (இலவம்) என்க. ஆகிய இவையெல்லாம் என
வருவித்தோதுக.
நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்கமணந்தவை என்னும்
நான்கனோடும் நிறைந்தும் உறழ்ந்தும் நிமிர்ந்தும் தொடர்ந்தும் என்னும்
நான்கனையும் (முறை நிரல் நிறையாகலின்) முறையே ஒட்டுக. மணந்தவை
போல என்புழி உள்ள போல என்பதனையும் அந் நான்கனிடையும் ஒட்டுக.
நிணத்தல் முதலிய நான்கும் மாலைபுனையும் தொழில்
வகைகள்.
அவையாவன: 'தெற்றுதல் கோத்தல் தொடுத்தல் கட்டுதல்' என்பன. தூக்க:
பலவறிசொல். மணந்தவை - மாலைகள் எனவே |
|
|
|