தூக்கவாகிய மணந்தவை; தூக்கிக்
கட்டப்பட்டனவாகிய மாலைகள்
என்றவாறு.
(பரிமே.) 75. மகளிர் வாய்போல் மலர்ந்த ஆம்பல்.
77. எருவையது நறுந்தோட்டையுடைய பூ. எருவை என்பது "எருவை
செருவிளை மணிப்பூங் கருவிளை" (குறிஞ்சிப் - 68) எனக் கபிலர் பாடிய
பெருங் குறிஞ்சியினும் வந்தது.
79. காலங்குறியாது பூக்கும் கோங்கு.
பூத்தலாலென்பது வருவிக்கப்பட்டது. மலர் பொலியும்
என்க.
83. வரைமலையெங்கும் விடியற்காலத்துப் பலநிலத்து
மேகமார்ந்த
வானம்போலப் பொலியும்.
85 - 94: நினயானை . . . . . . . சிறப்புணாக்கால்
(இ - ள்.) (93-4) நின்குன்றம் குறுகி - முருகவேளே
நின்னுடைய
திருப்பரங்குன்றத்தை அடைந்து, நின் வாரணங் கொடியேற்றும்
நினயானை - நினது கோழிச்சேவல் எழுதப்பட்ட கொடியை ஏற்றுதற்குரிய
நினது யானையினது, சென்னி நிறம் குங்குமத்தால் புனையா -
மத்தகத்தின் நிறத்தினைக் குங்குமத்தாலே கோலஞ்செய்து, பூநீர் ஊட்டி -
மலரொடு நீரையும் இனிதாக ஊட்டி, புனைகவரி சார்த்தா
- செவியின்கண் ஒப்பனை செய்தற்குரிய கவரியைச் சார்த்தி, பொன்
பவழப் பூங்காம்பின் பொன்குடை யேற்றி - பொலிவுடைய
பவழத்தாலாய அழகிய காம்பினையுடைய பொன்றுகில் போர்த்த
குடையினை அவ்வியானையின் மேலே ஏற்றி அதனோடு, மலிவு
உடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள் - அன்பர்கள் உவகை
மிக்க நெஞ்சத்தோடே நின் திருக்கோயிலை வலம்வந்து நினக்குச்
செய்யும் பூசையின்கண், கொள்கவழம் மிச்சில் சிறப்பு உணாக்கால் -
அந்த யானைக்கிடும் கவளத்தில் அஃதுண்டெஞ்சிய மிச்சிலைச்
சிறப்புடையதாகக் கருதி மகளிர் உண்ணாநிற்பர், அங்ஙனம் அவர்
உண்ணா தொழியின், பல் மணம் மன்னும் பின் இருங் கூந்தலார் -
பல்வேறு நறுமணங்களும் நிலைபெற்ற பின்னலையுடைய கரிய
கூந்தலையுடைய மடந்தை மகளிர், மணந்தார் முறுவல் தலையளி
எய்தார் - தம்மை மணந்து கொண்ட காதலருடைய புன்முறுவலொடு
கூடிய தலையளியைப் பெறமாட்டார், கன்னிமை கனிந்த காலத்தார் -
மணமாகாத கன்னிமைத்தன்மை முதிர்ந்த பருவத்தினையுடைய மகளிர்,
மறுவற்ற மைந்தர் தோள் எய்தார் - குறைவு அற்று நிரம்பிய
நல்லிலக்கணமமைந்த காதலரைப் பெறுவாரல்லர், உண்ட மகளிர்
அந் நலங்களைப் பெறுதல் ஒருதலை; |
|
|
|