பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்313

      (வி - ம்.) நின யானை என்புழி ஆறாவதன் பன்மையுருபு
ஒருமைக் கண் மயங்கிற்று. ஈண்டு யானை திருக்கோயிலின்கண் உள்ள
யானை என்க. இவ் வியானையை ஒப்பனை செய்து அதன் பிடரில்
கொடியுயர்த்துத் திருக்கோயிலை வலம்வந்து செய்யும் பூசனை என்க.
அப் பூசனைக்கண் அவ்வியானைக்கிடும் கவளமிச்சிலை மணமான
மகளிரும் ஆகாத கன்னியரும் கடவுட்டன்மையுடையதாகக் கருதி
உண்பர். உண்டவிடத்து அம் மகளிர் நிரலே காதலர் அன்பையும்,
சிறந்த காதலரையும் பெறுவர்; உண்ணாதார் பெறுதலிலர் என்றபடியாம்.
சென்னி - மத்தகம். புனையா - புனைந்து. பூநீர்: உம்மைத் தொகை
புனைகவரி: வினைத்தொகை. யானையின் செவிகளைக் கவரி கொண்டு
ஒப்பனை செய்யும் வழக்கத்தை,

"மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண்டுற்ற
கச்சியின் விகட சக்கரக் கணபதிக் கன்பு செய்வாம்"
(கந்தபு. காப்பு. 2.)
என்புழியும் காண்க.

      சார்த்தா - சார்த்தி. பொன்பவழம் என்புழி, பொன்- பொலிவு
என்னும் பொருட்டு. பூங்காம்பு - பூத்தொழில் செய்யப்பட்ட காம்புமாம்.
மலிவு - உவமைமிகுதி. அன்பர் என வருவித்துக்கொள்க. வாரணக்கொடி
என மாறுக. கிடந்தவாறே கொடியேற்றும் அவ் வாரணம் எனக் (யானை)
கோடலுமாம். பன்மணமன்னு பின்னிருங் கூந்தலர் என்றது மணமான
மகளிரை. கூந்தலர் தலையளி எய்தார்; கன்னிமை கனிந்த காலத்தார்
தோள் எய்தார் என்க: எதிர் நிரனிறை.

      மறுவற்ற மைந்தர் என்றது தலைவனுக்கோதிய நலன் எல்லாம்
நிரம்பிய காதலர் என்றவாறு. அவையாவன,

"பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோடு
உருவு நிறுத்த காம வாயின்
நிறையே அருளே யுணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"
      என்னும் இந் நூற்பாவிற் கூறப்பட்ட நலங்கள் என்க.

      (பரிமே.) இவ்வாறு மலைச்சிறப்புக் கூறி, மேல் வாழ்த்துவான்
முகம் புகுகின்றார்.
95-105: குறப்பிணா . . . . . . . தொழுதே

      (இ - ள்.) குறப்பிணாக் கொடியைக் கூடியோய் - குறப்
பெண்ணாகிய பூங்கொடியை ஒத்த வள்ளியை மணந்தருளிய பெருமானே,
வாழ்த்துச் சிறப்பு உணா - அம் முறையானே எளியேங்கள் வாழ்த்தும்
நினக்குச் சிறந்த செவியுணவாக அமையும் ஆதலால், செவி கேட்டி -
இவ் வொவ்வா வாழ்த்தினையும் நினது திருச்செவி சாய்த்துக்
கேட்டருள்க. உடையும் ஒலியலும் செய்யை - பெருமானே நீ
உடையானும் மாலையானும் சிவந்த நிறமுடையை, ஆங்கே படையும்
பவழக்கொடி நிறங் கொள்ளும் -