பக்கம் எண் :

பரிபாடல்- வையை 319

108 - 111: இவ்வாறு, ஊடலும் புணர்தலும் பிரிதலுமாகிய இக் காமத்தையும்
கள்ளையும் கலந்து மகளிர் யாவரும் பாராட்ட, அவர் விரும்பின தம்
காதலரோடு நீராடும்படி பிரிந்த தலைவர்களைக் கொணர்ந்துவந்து
கூட்டுதல் இவ் வையைக்கு இயல்பு.

   கடல்குறை படுத்தநீர் கல்குறை படவேறிந்
   துடலே றுருமின மார்ப்ப மலைமாலை
   முற்றுபு முற்றுபு பெய்துசூன் முதிர்முகில்
   பொருதிகல் புலிபோழ்ந்த பூநுதல் எழிலியானைக்
 5 குருதிகோட் டழிகரை தெளிபெறக் கழீஇயின்று
   காலைக் கடல்படிந்து காய்கதிரோன் போயவழி
   மாலை மலைமணந்து மண்துயின்ற கங்குலான்
   வானாற்று மழைதலைஇ மானாற்று மலர்நாற்றம்
   தேனாற்று மலர்நாற்றஞ் செறுவெயில் உறுகால
10 கானாற்றுங் கார்நாற்றங் கொம்புதிர்த்த கனிநாற்றம்
   தானாற்றங் கலந்துடன் தழீஇவந்து தரூஉம் வையை
   தன்னாற்ற மீது தடம்பொழில் தான்யாற்று
   வெந்நாற்று வேசனை நாற்றங் குதுகுதுப்ப
   ஊரூர் பறையொலி கொண்டன் றுயர்மதிலில்
15 நீரூர் அரவத்தாற் றுயிலுணர் பெழீஇத்
   திண்டேர்ப் புரவி வங்கம் பூட்டவும்
   வங்கப் பாண்டியில் திண்டேர் ஊரவும்
   வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும்
   கயமாப் பேணிக் கலவா தூரவும்
20 மகளிர் கோதை மைந்தர் புனையவும்
   மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும்
   முந்துறல் விருப்பொடு முறைமறந் தணிந்தவா
   ஆடுவார் பொய்தல் அணிவண் டிமிர்மணற்
   கோடே றெருத்தத் திரும்புன லிற்குறுகி
25 மாட மறுகின் மருவி மறுகுறக்
   கூடல் விழையுந் தகைத்துத் தகைவையை
   புகைவகை தைஇயினார் பூங்கோதை நல்லார்
   தகைவகை தைஇயினார் தார்;
   வகைவகை தைஇயினார் மாலை மிகமிகச்