30 சூட்டுங் கண்ணியு மோட்டு வலையமும்
இயலணி அணிநிற்ப வேறி யமர்பரப்பின்
அயலய லணிநோக்கி ஆங்காங்கு வருபவர்
இடுவளை ஆரமோ டீத்தா னுடனாகக்
லகடுவளை பூண்டவள் மேனியிற் கண்டு
35 நொந்தவள் மாற்றாள் இவளென நோக்கத்
தந்த கள்வன் சமழ்ப்புமுகங் காண்மின்
செருச்செய்த வாளி சீற்றத் தவையன்ன
நேரிதழ் உண்கணார் நிறைகா டாக
ஓடி யொளித்தொய்யப் போவா ணிலைகாண்மின்
40 எனவாங்கு
ஒய்யப்போ வாளை யுறழ்ந்தோளிவ் வாணுதல்
வையை மடுத்தாற் கடலெனத் தெய்ய
நெறிமண னேடினர் செல்லச்சொல் லேற்று
செறிநிறைப்பெண் வல்லுறழ் பியாது தொடர்பென்ன
45 மறலினாள் மாற்றான்மகள்;
வாய்வாளா நின்றாள்
செறிநகை சித்தந் திகைத்து;
ஆயத் தொருத்தி யவளை யமர்காம
மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை
50 பெண்மைப் பொதுமைப் பிணையிலி யைம்புலத்தைத்
துற்றுவ துற்றுந் துணையிதழ் வாய்த்தொட்டி
முற்றா நயநறா மொய்புன லட்டிக்
காரிகைநீர் ஏர்வயற் காமக் களிநாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முதுசாடி
55 மடமதர் உண்கண் கயிறாக வைத்துத்
தடமென்றோள் தொட்டுத் தகைத்து மடவிரலால்
இட்டார்க் கியாழார்த்தும் பாணியில் எம்மிழையைத்
தொட்டார்த்தும் இன்பத் துறைப்பொதுவி கெட்டதைப்
பொய்தன் மகளிர்கண் காண இகுத்தந்திவ்
60 வையைத் தொழுவத்துத் தந்து வடித்திடித்து
மத்திகை மாலையா மோதி அவையத்துத்
தொடர்ந்தேம் எருது தொழில்செய்யா தோட
விடுங்கடன் வேளாளர்க் கின்று படர்ந்தியாம்
|
|