இனி இவற்றுள் மத்தளம் - மத்து: ஓசைப்பெயர்: இசையிடனாகிய
கருவிகட்கு எல்லாம் தளமாதலான் மத்தளம் என்று பெயராயிற்று"
எனவரும் அடியார்க்கு நல்லார் உரையானும் (சிலப் - அரங்: 27. உரை.)
உணர்க.
மாற்றாளை மாற்றாள் வணங்குதல் பெருமையின்று என
முன்
அப் பரத்தை கூறினாளாகலின், நினது பெருமையை நீ கூறிக்காட்டல்
வேண்டா, யாம் அறிவேம் என்பாள், நீ வாய்வாளா (நீ சொல்லாதமைக)
என்றாள் என்க.
இவ்வணிகலன் நினக்குத் தந்த தலைவனுடையனவும் அல்ல
எனக்கு வந்த சீதனப் பொருள் என்பாள் "எந்தை எனக்கீத்த" என்றாள்.
இடுவளை: வினைத்தொகை. தருக்கு - மேம்படுவாயாக. மாயம் -
வஞ்சனை.
(பரிமே.) மேல்பரத்தை.
79 - 83: மாலை . . . . . . . எனவாங்கு
(இ - ள்.) அதிரல் அம் கண்ணி - அழகிய மோசி
மல்லிகை
மலர் மாலையணிந்த நங்கையே, நீ சால அன்பன் எற்கு சால அன்பன்
- நீ பெரிதும் அன்பு பூண்டவன் என்பாற் பெரிதும் அன்புடையன்
ஆதலால், மாலை அணி விலை தந்தான் - இவ்வளையலையும்
முத்துமாலையையும் புணர்தற்கு விலையாக எனக்குத் தந்தான், மாதர்
- அழகுடையாய், நான் கள்வி அல்லேன் - யான் உன்
அணிகலன்களைக் களவு கொண்ட கள்வி அல்லேன் என்று அறிந்து
கொள்க, நின்கால சிலம்பு கழற்றுவான் - இவையேயன்றி நினது
காலின்கண்ணவாகிய சிலம்புகளையும் எனக்குத் தரும்பொருட்டுக்
கழற்றுந்தன்மையுடையன், அவன் கள்வன் - அவனே கள்வன் ஆவான்,
கதுவாய் - அவனைப் பற்றுவாயாக, என ஆங்கு - என்று அப் பரத்தை
கூறிய அளவிலே;
(வி - ம்.) அதிரல் - மோசிமல்லிகை. கண்ணி -
தலையிற்
சூடும் மாலை. நீ அன்பு பூண்டவன் என்றாள், நின்பால் அவன் அன்பு
பூண்டவன் அல்லன் என்று தலைவியை இகழ்தற்கு. எற்கு - எனக்கு.
கதுவுதல் - பற்றுக்கோடல்.
(பரிமே.) மேல் தலைமகற்கு வையைநீர் விழவு தான்
கூறி,
அதனுள் அணிநோக்கி வருவார் தம்முள் உவந்தவை காட்டிக் கூறியன
கொண்டு கூறிய பாணன் 'ஒய்யப் போவாளை' (41) என்பது முதல்
இவ்வளவும் நிகழ்ந்தவை கூறி, அவ்வளவிற் பரத்தையை வெகுளியாற்
சொல்லியனவும் அத்தலைவியைக் கழறியனவும் கொண்டு கூறுகின்றான்.
84 - 5: வச்சியமானே! . . . . . . நும்மவே
(இ-ள்.) வச்சியமானே - இந் நிகழ்ச்சியைக் கண்டுநின்ற
மகளிருட்
சிலர் இடையே வந்து பரத்தையை நோக்கிக் கண் |
|
|
|