டோரை அழகானே கவரும் இயல்புடைய
மான் போன்றவளே; மறலினை
மாற்று - நீ இனி எதிர்த்தலை ஒழிவாயாக; நச்சினார் ஈபவை நாடு அறிய
நும்மவே - நும்மை விரும்பின காமுகர் நுமக்குத் தந்த பொருள்கள்
உலகமறிய நுமக்கு உரிமையுடையனவே ஆகும் என்று அவள் சினத்தை
இனி திற்றணித்துப் பின்னர்த் தலைவியை நோக்கி;
(வி - ம்.) இப் பகுதி இந் நிகழ்ச்சியைக் கண்டு
நின்ற ஏதிலராகிய
மகளிர் கூற்றென்க. கலாம் நிகழுமிடத்தே நிற்போர் இருவரிடையேயும்
புகுந்து அக்கலகத்தைத் தவிர்ப்பது உலகவியல் ஆதலறிக. இங்ஙனம்
நடுநிற்போர் இருதிறத்தார் சினமும் தணிதற்கியன்றன கூறுதலும்,
உலகியலிற் காணலாம். அங்ஙனமே பரத்தையின் சினந் தணியுமாறு கூறி,
மேல் தலைவியை இடித்துரைக்குமாற்றானே தெருட்டுகின்றார் என்க.
இடித் துரையைக் குலப்பிறப்புடையோரே கேட்குந் தகுதியுடையர்
ஆதலும் நினைக.
(பரிமே.) 84. வச்சியம் - வசிகரித்தல், என்று
பரத்தையைத்
தணித்துப் பின் தலைவியை நோக்கி:-
86 - 95: சேக்கை . . . . . . . எனவாங்கு
(இ - ள்.) நல்லாய் நிகழ்வது அறியாது முனியல் முனியல்
-
நங்கையே உலகியல்பினை அறியாமல் அப்பரத்தையைச் சினவாதேகொள்
சினவாதே கொள்; நீ நில்லு - நீ அமைக, கொடியியலாய் - பூங்கொடி
போல்வாளே, காமம் கடவரை நிற்குமோ - மைந்தருடைய காமம்
நிற்கக்கடவ இடத்தேயே நிற்ப தொன்றாமோ?, சேக்கை இனியார்பால்
செல்வான் காக்கை கடிந்து ஒழுகல் மனையாளால் கூடுமோ கூடா -
புணர்ச்சி இனிமை மிக்குடைய பரத்தையரிடத்தே செல்லும்
இயல்புடையானொரு கணவனைச் செல்லாமற் காத்தலும் சென்றான்
என்று நீக்கி ஒழுகுதலும் அவன் மனைவியால் கூடுமோ? கூடா,
சான்றாண்மை சான்றார் தகவு உடையர் - சால்புடைமை மிக்கவராகிய
கற்புடைய மகளிர், இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவர் - தம்மைக்
கணவர் இகழ்ந்த விடத்தும் தாம் அவரை ஏத்தி வணங்குவர்; மைந்துற்று
மகளிரை அமர்பு உற்ற மைந்தர் அகலம் கடிகுவேம் என்பவை - தாம்
காமத்தால் மயக்கமுற்றுப் பரத்தையரை விரும்பி அவரைச் சேர்ந்த
மைந்தருடைய மார்பினை இனித் தோயேம் என்று இருத்தல்,
யார்க்கானும் முடிபொருள் அன்று - குலமகளிர் யார்க்கும் முடிவு
போக மேற்கொள்ளு மொருசெயல் அன்று, என - என்று தலைவியைத்
தெருட்டாநிற்ப;
(வி-ம்.) சேக்கை இனியார் - புணர்ச்சியின்பத்தைப்
பெரிதும்
இன்பமுடைத்தாக்கி நுகர்விப்பாராகிய பரத்தையர் என்க. என்னை?
ப.--22 |
|
|
|