பக்கம் எண் :

பரிபாடல்- வையை 340

போல மலர் கோலும் சுனை கழிந்து தூங்குவன - குடை விரித்தாற்
போன்று விரிந்த அக் காந்தள் மலராலே சூழப்பட்ட சுனைகளினின்றும்
கழிந்து கீழே விழுவனவாகிய, நீரின் மலர் - நீர்ப் பூக்களும்,
சினைவிரிந்து உதிர்ந்த வீ - மரக்கோடுகளிலே மலர்ந்துதிர்ந்த
மலர்களும், புதல்விரி போதொடும் - புதல்களிலே மலர்ந்த மலர்களும்
ஆகிய, அருவி சொரிந்த - மலையினின்றும் வீழும் அருவி கொணர்ந்து
தன்பாற் சொரிந்த இன்னோரன்ன மலர்களை, திரையில் துரந்து -
வையையாறு தன் அலைகளாலே தள்ளிக் கொண்டு, நீள்மாடக் கூடல்
கடிமதில் நெடுமால் சுருங்கை நடுவழி போந்து - நீண்ட
மாடங்களையுடைய மதுரைக்கு அரணாக அமைந்த மதிலின்கண் உள்ள
நெடிய பெரிய சுருங்கையினூடே வந்து, நெடுநீர் மலிபுனல்
பெய்யும்பொழுது - பெருந்தன்மை மிக்க நீரைச் சொரியும்பொழுது
அந் நீர், கடுமா களிறு கை அணத்து விடு நீர்போலும் - கடிய
விலங்காகிய களிற்றியானை தன் கையை உயர எடுத்து விடாநின்ற
நீரினை ஒத்துத் தோன்றா நிற்கும்;

      (வி - ம்.) மாதர் கைபோற் குவிந்தமுகை என்றது குறிப்பால்
காந்தள் முகையை உணர்த்தியது. அரவுடன்றவைபோல் விரிந்த குலை
என்பதுமது. குடைவிரிந்தவைபோலும் மலர் என்பதுமது. சுனைநீரினின்று
உயர்ந்து வளைந்து தொங்குவனவாகிய நீர்ப்பூ என்க. புதல் -
குறுஞ்செடிகள். புதலின் மலரும் என்றதனால், புதன்மேற் படர்ந்து
விரியும் கொடிமலரும் கொள்க. எனவே, கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ,
நிலப்பூ என்னும் நால்வகை மலரும் என்பதாயிற்று.

      சொரிந்த: பலவறிசொல். துரந்து - தள்ளி. சுருங்கை - குழாய்.
நெடுமால் சுருங்கை - நீண்ட பெரிய குழாய் என்க. நடு என்றது
உள் என்னும் பொருட்டாய் நின்றது. கடுமா - யானை: கடுமாவாகிய
களிறென்க. அணத்து - மேலே எடுத்து: நான்மாடக்கூடல் என்பவாகலின்
'நீண்மாடக் கூடல்' என்றார். மதுரையின்கண், நான்கு மாடங்கூடலின்
நான்மாடக் கூடலாயிற்று. அவை: திருவாலவாய் திருநள்ளாறு
திருமுடங்கை திருநடுவூர்; இனி, கன்னி கரியமால் காளி ஆலவாய்
என்றுமாம். எனக் கலித்தொகையின்கண் "நான்மாடக்கூடன் மகளிரும்
மைந்தரும்" (92-95) என்ற தொடர்க்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர்
வகுத்த விளக்கவுரையானும் உணர்க. நல்லிசைப் புலவர் பலரும்
மதுரையை மாடத்தாற் சிறப்பித் தோதுதலும் காணலாம். "மாடம்
பிறங்கிய மலிபுகழ்க் கூடல்" (மதுரைக். 429) எனவும், "மாடமலி மறுகிற்
கூடல்" (திருமுரு - 71) எனவும், "கொடிமாடக் கூடல்" (சிலப். குன்றக்,
பாட்டுமடை - 24) எனவும் வரும்.

      நெடுநீர் - பெருந்தன்மை. கடிமதில் - காவலாகிய மதில்.

108 - 111: நாமமர் . . . . . . . . இயல்பு

      (இ-ள்.) ஊடலும் - ஊடுதலும், நட்பும் - புணர்தலும், நாம் அமர்
தணப்பும் - தலைவியினது அச்சந் தங்குதற்கு