இடமான பிரிவும் என்னும் இவற்றையுடைய
காமமும் கள்ளும்
உடன்கலந்து - காமத்தையும் இதற்குச் செருக்கினையளிக்கும்
கள்ளினையும் ஒருசேரக் கலந்து, பாராட்ட - மகளிரெல்லாம் யாவரும்
பாராட்டும்படி, தாம் அமர் காதலரோடு ஆடப்புணர் வித்தல் - தாம்
விரும்பின காதலரோடு தன்பால் நீராடும்படி முன்னர்ப் பிரிந்தவரைக்
கொணர்ந்து கூட்டுதல், பூமலி வையைக்கு இயல்பு - மலர்கள் மிக்க
இவ் வையையாற்றிற்கு இயல்பாகும்;
(வி - ம்.) நாம் - அச்சம்: நாம் அமர் தணப்பு
எனக் கூட்டுக.
பிரிவு - தலைவிக்கு அச்சந்தருவதோர் ஒழுக்கம் ஆதல் உணர்க. ஊடல்
புணர்தல் பிரிதல் என்னுமிவற்றையுடைய காமத்தையும் கள்ளையும்
உடன்கலந்து மகளிர் யாவரும் பாராட்டத் தம் காதலரோடு ஆடப்
புணர்வித்தல் வையைக்கு இயல்பு என்பதாம்.
இதனால் கார்ப்பருவத் தொடக்கத்தே மீண்டுவருவேன்
எனத்
தலைவிக்குக் கூறிவந்த தலைவனுக்குப் பாணன் அக் கார்ப்பருவ
வருகையைக் குறிப்பாக உணர்த்தினமை உணர்க.
(பரிமே.) 109. இதற்கு (காமத்திற்கு)ச் செருக்கினை
விளைக்கும்
கள்ளும்.
110. முன்பிரிந்தவரைக் கொண்டுவந்து கூட்டுதல்.
|
|
|
|