பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்355

போலும் - புடைபெயர்வனவாகிய அம்புகளையே ஒப்பனவாகும்.

      (வி - ம்.) அடர் - தகடு. படர் - படர்ந்த. கொடிமின்னு -
மின்னற்கொடி. கண்ணுக்கு ஒளிரும் திகழும் அடர் என்க. ஒண்ணகை
- ஒள்ளிய சுடர். தகை வகை - அழகின் கூறுபாடு. நெறி - நெறிப்பு:
அறல். செண்ணிகைக் கோதை - தலைக்கோலங்களாகிய மாலை
செண்ணித்தல் - ஒப்பனை செய்தல். அகநானூற்றின்கண் (களிற்றி - 59.)
தண்கயத்த மன்ற என்னும் செய்யுளில் (14) "தண்ணறுங் கழுநீர்ச்
செண்ணியல் சிறுபுறம்' என்னும் அடியில், செண்இயல் என்பதற்கு
அதன் உரையாசிரியர் (திரு.ந.மு.வே.நாட்டார் அவர்கள்) "கொண்டை
அசைதலையுடைய" எனப் பொருள் கூறி "செண் - ஒப்பனை செய்யப்
பெறுவதால் கொண்டைக்குப் பெயராயிற்று" என விளக்கிச் சேறலானும்
அஃ திப்பொருட்டாதல் உணர்க. இனிச் "செண்ணச் சிவிகை" ஒப்பனை
செய்யப்பட்ட சிவிகை (பெருங்கதை - 1-37. 269) என்றும், "செண்ண
அம் சிலம்பு - அணிந்த அழகிய சிலம்பு" (சீவகசிந்-1333.) என்றும் பிற
சான்றோரும் ஓதுமாற்றானும் உணர்க. இச்சொல் பிற்றை நாள்
சண்ணித்தல் என வழங்கப்பட்டமை "சாந்தம் நீறெனச் சண்ணித்த
புண்ணியத் தனிமுதல்" (மாறியாடிய - செ. 2) எனவரும் திருவிளையாடல்
செய்யுளான் உணரலாம். கதுப்பு - கூந்தல். இயல - அசைய. மணிமருள்
தேன் - மாணிக்கம் போன்ற சிவந்த நிறமுடைய தேன். கள்ளிற்கு
ஆகுபெயர். பைந்துகில் - பிணி நெகிழ என மாறுக. நுடங்குவாளாய்
ஒசிபவள் ஏர். கொம்பர் அழகு போன்ம் என்க. போன்ம் - போலும்.
ஆடையசைய அணியசைய ஆடுவதொரு கொம்புளதாயின் அதனழகு
போலும் என்க. இஃ தில்பொருள் உவமை. ஊழ் - முறை. வாளி -
அம்பு. புடை பெயருவனவாகிய வாளி என்க.

      12 -ஆம் அடி தொடங்கி இதுகாறும் மலைச்சிறப்புக் கூறி மேலே
முருகப் பெருமானை முன்னிலையாக்கி வாழ்த்தி முடிக்கின்றார்.

      (பரிமே.) மின்னுப்போற் கோதை என இயையும். . . . .

      54. ஒளிர்திகழ்: வினைத்தொகை யடுக்கு.

      56. அக்கோதை கதுப்போடசைய.

      57-8. மாணிக்கத்தை யொக்கச் சிவந்த . . . . கள்ளை நுகர்ந்த
மகிழ்ச்சி தடுப்பப் பசுமையுடைய துகிலுடை நெகிழ (59) ஆங்கு: அசை.

66 - 70: மாறமர் . . . . . . தொழுதே

      (இ - ள்.) மாறு அமர் அட்ட வை மற வேல் பெயர்ப்பவை -
பகைவரைப் போரின்கட் கொன்ற கூரிய வீரவேலைச் சுழற்றுதலுடையை,
ஆறு இரு தோளவை - பன்னிரண்டு திருக்கைகளை உடையை,
அறுமுகம் விரித்தவை - ஆறு திருமுகங்களையும் விரித்தல் உடையை,
ஒன்றார் தேய்த்த செல்வ - பகைவரை