பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்356

அழித்து இல்லையாக்கிய இறைவனே!, நன்று அமர் ஆயமொடு -
பெரிதும் விரும்பின எம் சுற்றத்தாரோடு, ஒருங்கு நின்தொழுது - சேர
நின் திருவடியைத் தொழுது, நின் அடியுறை இன்றுபோல் இயைக எனப்
பரவுதும் - நினது திருவடி நீ ழலிலே தங்குதல் இன்றுபோல என்றும்
இயைக என்று வேண்டிக்கொள்கின்றோம். அருள்வாயாக!

      பெயர்ப்பவை - பெயர்த்தலுடையை. தோளவை - தோளினை
உடையை. விரிப்பவை - விரித்தலுடையை. நன்று - பெரிது. ஆயம் -
சுற்றம். ஒன்றார் - பகைவர். பரவுதும் - வேண்டுகின்றோம்.