(பரிமே.) 18-9. . . . . .ய நறவு.
19. அணி - ஆபரணம். . . . . . .
20. பின்னே பின்னே தொடர முற்பட்டு.
21-3. மகளிர் செறிந்த தொடைத் தொழிலால் பொலிந்த.
. ...
மாலையராய் வாடாமை அமைந்த. . . .சக. . . . . கோதையராய்.
23. மைந்தர், தாரார்ந்த முடியராய்ச் சுற்றிய மாலைபொருந்திய
மார்பினராய்.
25. நெரிய ஈண்டி. . . . . . .காவின்கண் நிறைய.
26 - 35: வேலாற்று . . . . . . . .கவின்
(இ-ள்.) வேல் ஆற்றும் மொய்ம்பனின் ஆற்று முன்பின்
புனை
கழல் மைந்தரொடு - வேற்போரைச் செய்யும் தோளினையுடைய
முருகனைப் போலப் போர் செய்யும் வலியினையும் வீரக்கழல் கட்டிய
கால்களையும் உடைய மைந்தரும், விரை மலர் அம்பினோன் போல்
தார் அணி மைந்தர் - மணமுடைய மலர்களை அம்பாகக் கொண்ட
மதவேளைப் போன்று மாலையினையும் அழகினையும் உடைய
மைந்தரும், கார் அணி கூந்தல் கயல் கண் அவிர் இதழ்வார் அணி
கொம்மை வகை அமை மேகலை ஏர் அணி இலங்கு எயிற்று இன்
நகையவர் - முகிலினது அழகைக் கொண்ட கூந்தலினையும் கயல்மீன்
போன்ற கண்ணினையும் முருக்கம்பூப் போன்று சிவந்த உதடுகளையும்
கச்சணிந்த இளமுலைகளையும் வகைவகையாகக் கோத்த
மேகலையினையும் அழகிய வரிசையமைந்து விளங்கா நின்ற
எயிற்றினையும் இனிய புன்முறுவலினையும் உடைய இம் மகளிரும்,
தவப்பயன் சான்ம் என - செய்த தவத்தினது பயன் பெரிதென்று
கண்டோர் கூறாநிற்ப, தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின்
- கரையினிடத்தும் வையையினிடத்தும் கூடுவதனாலே கட்புலனாய்த்
தோன்றாநிற்கும் அழகு, இவர் சீர் அணி வையைக்கு அணி கொல்லோ
- இம் மைந்தரும் மகளிரும் இயற்கையழகினையுடைய
இவ் வையையாற்றிற்கு அழகு தந்தாரோ, வையைதன் நீர் அணி நீத்தம்
இவர்க்கு அணி கொல்லோ என - அல்லது இவ்வையையினது நீரானே
அழகுற்ற வெள்ளம் இவர்க்கு அழகு தந்ததோ என்று, தேருநர்
தேருங்கால் தேர்தற்கு அரிது - ஐயுற்றுத் தெளிய முயல்வோர்
ஆராயுங்கால் இரண்டில் ஒன்றனைத் தெளிந்து கொள்ளுதற்கு அரிதாகும்;
(வி - ம்.) வேற்போர் ஆற்றும் மொய்ம்பினை உடையான்
என்க.
ஆற்றுதல் - செய்தல். மொய்ம்பு - தோள்; வலிமையுமாம். |
|
|
|