பக்கம் எண் :

பரிபாடல்- வையை363

மொய்ம்பனின் - மொய்ம்பனைப்போல. ஆற்றும் முன்பு - போர்செய்யும்
வலிமை. முருகனைப்போல ஆற்றலுடைய மைந்தர் என்க. விரை மலர்
அம்பினோன் - மதவேள். மதவேள் போலத் தாரினையும், அணியையும்
உடைய மைந்தர் என்க. எனவே, முருகனை ஆற்றலானும் மதவேளை
அழகானும் ஒத்த மைந்தர் என்றவாறாம்.

"இதந லம்பெறும் அழகினும் திறலினும் இலங்கி
மதன னும்கலை முருகனும் எனும்படி வளர்ந்தான்"
(வில்லிபார.)
என்றார் பிறரும்.

      கார் அணி கூந்தல் - காரினது அணியினைக் கொண்ட கூந்தல்
என்க.

      கவிர் - முருக்கு. அதன் பூ உதட்டிற்கு உவமை. வார் - கச்சு.
கொம்மை - இளமுலை. வகை வகையாகக் கோத்த மேகலை என்க. அணி
- வரிசை. எயிறு - பல். நகை - புன்முறுவல். மைந்தரொடு
இன்னகையவரும் தீரமும் வையையும் சேர்கின்றதனால் கட்புலனாம்
அழகு என்க. பரிமேலழகர் இங்ஙனம் கூறாது வேறு கூறுவர். அதனைக்
கீழே காண்க. இவர் வையைக்கு அழகளித்தாரோ வையை நீத்தம்
இவர்க்கு அழகளித்ததோ என்று ஐயுற்றுத் தெளிய முயல்வோர்
ஆராயுங்கால் தெளிதற்கு அரிதாம் என இயைக்க. தீரம் - கரை. கவின்
- அழகு. சான்ம் - சாலும். இவ்வையைக்கண் நீராடும் பேறு
பெற்றமையால் இவர் செய்த தவப்பயன் பெரிதாதல் வேண்டும் என்று
கண்டோர் கூற என்க.

      (பரிமே.) 26-8. வேற்போரைச் செய்யும்
மொய்ம்பினையுடையோனாகிய முருகனைப் போல ஆற்றலோடு
கூடிய வலியினையும் புனைகழலையுடைய மைந்தரும் செய்த தவத்துப்
பயன் பெரிதென்று கண்டோர் கூற 29. கவிர் - முருக்கு. 30. கொம்மை
- இளமுலை. வகை வகையாகக் கோத்த மேகலை.

      (28) சான்மென என்னும் வினையெச்சம் . . . . . இனிய
நகையினையும் (31) உடைய என இரண்டாவதனொடு விரிந்த
பெயரெச்ச வினை கொண்டது.

      32 - 5. அவ் விருதிறத்தாரையும் கரையையும் வையையையும்
சேர்கின்ற கட்புலனாகிய அழகு தேர்தற்கு அரிது. (34) காண் என்பது
முன்னிலையசை.

36 - 45: மண் . . . .. . . . . முன்றுறையால்

      (இ - ள்.) (45) தீம் புனல் வையைத் திருமருத முன்றுறையால்
- இனிய நீரையுடைய வையை யாற்றின் கண்ணதாகிய திருமருத
முன்றுறையின்கண், மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு
- மண்ணாலாகிய திரண்ட குடமுழாவினது இனிய கண்ணிற் பிறக்கும்
முழக்கத்திற்கு, எதிர்வ பொருவி . . . .ம் ஏறு மாறு இமிழ்ப்ப எதிர்வன
போன்று . . . . . இடியேறு மாறாக முழங்கா நிற்பவும், கவர் தொடை