பக்கம் எண் :

பரிபாடல்- வையை365

      (பரிமே.) மார்ச்சனையையுடைய முழவின் இனிய கண்ணின்
இமிழ்விற்கு எதிரே விண்ணின்கட் டம்மிற் . . . . . . . . . மறாதினகண்
உருமேறு மாறாய் முழங்க. (இவ்வுரையை நோக்குமிடத்து      
37-இவ்விடத்தே ஓர் அடி முழுதும் அழிந்தது கொல் என்ற ஐயம்
தோன்றுகின்றது.)

      38. கவர்தொடை - விரும்பப்படும் பாலைக்கோவை.

      39. பூக்களையுடைய சினைக்கண்ணே இமிர.

      தாளத்தி . . . . . . . .னமகளிரா. . .. . . . .நத.

      42. வளியாகிய நடன்.

      இவ்வாற்றான் ஆண்டுகள் . . . . . . . . . .னொன்றோடொன்று
மாறு கொள்ளு நதி . . . . . . .
.
46 - 49: கோடு . . . . . . சிலம்பு

      (இ-ள்.) கோடு, உளர் குரல் பொலி ஒலி துயல் இருங் கூந்தல்
- மரக்கொம்பிற் றோன்றி அசையாநின்ற பூங்கொத்துக்களாலே பொலிந்து
தழைத்த அசைகின்ற கரிய கூந்தலையுடைய; . . . .. . . .புரைதீர் நெடு
மெல் தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின் . . . . . . .
குற்றமற்ற நெடிய தோளின்கண் தாழ்ந்து தளிரும் பூவுமுடைய
ஆடாநின்ற கொடிபோல, நீள் தாழ்பு தோக்கை நித்தில அரி சிலம்பு
- நீண்டு தாழ்ந்த தொங்கலுடனே முத்தாகிய பாலையுடைய
சிலம்பு . . . . . . .

      (வி - ம்.) கோடு - மரக்கொம்பு. உளர் - அசையாநின்ற. பொலி
- பொலிந்த. குரல் - பூங்கொத்து. ஒலி - தழைத்த. துயல் - அசையா
நின்ற. புரை - குற்றம். தழை - தளிர். துவளா - துவள்கின்ற; அசைகின்ற.
வல்லி - கொடி: தாழ்பு - தாழ்ந்து. தோக்கை - தொங்கல். நித்தில
அரி - முத்தாகிய பரல்.

      (பரிமே.) 46. கொத்துக்களாற் பொலிந்து தழைத்து அசைகின்ற
கரிய கூந்தலையுடைய.

      47-8. பொருந்திய விறை . . . . . தோளிற்றாழ்ந்து
தழையும் . . . . . கொடி. . . ..

      இப் பகுதி பொருள் முடிபும் சொன்முடிபும் தோன்றாதபடி
இடை இடையே சிதைந்து கிடத்தலுணர்க.

      இப் பாடலின் இறுதிப் பகுதி பண்டைக்காலத்தேயே அழிந்தது
எழுபது பரிபாடல் எனப்பட்ட இத் தொகை நூலில், இக் காலத்தே
கிடைத்த நூலிற்கண்ட பாடல்கள் இவ்வளவே.

      இப் பாடலின் இறுதிப் பகுதி அழிந்தொழியவும் இப் பகுதிக்குரிய
பரிமேலழகர் உரை இடையிடையே சிதைந்து எஞ்சியது கீழே காண்க.