பூவின் இடை இடை இதழ்ப் போதின்வாய்
வண்ண வரி வண்டு ஆர்ப்ப
- தம்பால் உள்ள தண்ணிய நறிய தாமரைப் பூக்களின் இடையிடையே
உள்ள அன்றலரும் இதழ்களையுடைய நாளரும்புகளின் வாயிடத்தே தேன்
பருகும் பொருட்டு நிறமும் வரியும் அமைந்த வண்டினங்கள் முரலாநிற்ப,
கயமீன் வீற்றிருக்கும் விண் விரி தகையில் கண் வீற்றிருக்கும் - பரிய
நாண் மீன்கள் பொருந்தியிருக்கும் வானம் விரிந்து கிடக்குமாறுபோல
விரிந்து கிடக்கும் இடமுடைத்தாய்க் கிடக்கும்.
(வி - ம்.) மலர்ந்த முதிய பூக்களின் இடையிடையே
உள்ள நாண்
மலரின் வாயிடத்தே வண்டுகள் பாட என்பார். தாமரைப்பூவின்
'இடைஇதழ்ப் போதின்வாய் வண்டார்ப்ப' என்றார். இதழ்ப்போது என்றது
அன்றலரும் செவ்வியிதழையுடைய நாளரும்பு என்பதுபட நின்றது.
கயமீன் - பரிய விண்மீன்: மெல்லென மெல்லென மிளிரும்
விண்மீன் எனினும் பொருந்தும். என்னை? கய என்னும் உரிச்சொல்
பெருமை, மென்மை என்னும் இருபண்பும் குறிப்பதாகலான். உவமைக்குக்
கூறப்பட்ட கயமீன் மிளிர்தலைக் கயத்திற்கும் கொண்டு நாண்மீன்போன்று
மிளிரும் பரிய மீன்களையுடைய கயம் என்க. கயமீன் வீற்றிருக்கும் விண்
விரிதகையில் கண் விரிதகைக் கயம் என்க. கண் இடம். விண்போன்று
விரிந்த இடமுடைத்தாகிய கயம் என்க. கயம் - நீர்நிலை குளம், ஓடை,
வாவி, ஏரி முதலியன. விரிதகையின் - விரிந்த அழகுபோன்று என்க.
இதனால் மருதநிலத்தின் மாண்பு கூறப்பட்டது. நீர்வளம்
கூறவே
ஏனைவளம் கூறாமலே அமையும் என்பதுபற்றி முதலில் நீர்வளம்
ஓதினார்.
14 - 17: ஒருசார். . . . . . . வயல்
(இ - ள்.) ஒருசார் - பெருமானே! நின் திருப்பதியின்
மற்றொரு
பக்கத்திலே, சாறுகொள் ஓதத்து இசையொடு மாறு உற்று உழவின் ஓதை
பயின்று - மருதநிலத்தின் கண்ணே ஆலைகளிலே கருப்பஞ் சாற்றைப்
பிழிந்து கொள்ளுதலானே எழும் ஓசையாகிய ஆரவாரத்தோடு
மாறுபட்டுக் களமர்கள் உழுங்கால் ஏரைப் பாடும் ஏர்மங்கலப் பாடல்கள்
பாடும் ஆரவாரத்தை எழுப்பி மேலும், அறிவு இழந்து -
கள்ளுண்டமையானே அறிவு மயங்கி, திரிநரும் - யாண்டும் திரியா
நிற்போரும், ஆர்த்து நடுநரும் - உழத்தியர் குரவைபாடி நாற்று
நடுவோரும் ஆகி, ஈண்டி - தம்பால் குழுமாநிற்ப, திரு நயத்தக்க வயல்
- திருமகளும் விரும்பி வீற்றிருக்கும் தகுதியுடைய கழனிகள் உள்ளன;
(வி-ம்.) பெருமானே! நினது திருப்பதியின் மற்றொரு
சார்,
ஆலையின் ஆரவாரத்தோடு மாறுபட்டு ஏர்மங்கலம் பாடுவோரும் |
|
|
|