இல்லா அந்தணர் ஈண்டி - வேதங்கூறிய
ஒழுக்கத்தே ஒரு சிறிதும்
பிறழ்தல் இல்லாத அந்தணர் மிக்கு வாழ்தலானே, அறத்தில் திரியா
பதி - ஏனையோரும் தத்தமக்குரிய அறவொழுக்கத்தே பிறழா
தொழுகுதற் கிடமான நகரம் உளது;
(வி-ம்.) அறத்தொடு வேதம் தவம் முற்றிய அந்தணர்,
விறற்புகழ்
விளங்கிய அந்தணர், கேள்வித்திறத்தில் திரிவில்லா அந்தணர்,
கேள்வித்திறத்தில் திரிவில்லா அந்தணர் எனத் தனித்தனி கூட்டுக.
ஈண்டி என்னும் செய்தெனெச்சத்தை ஈண்ட எனச் செயவெனெச்சமாக்கி
ஏதுவாக்குக.
அந்தணர் ஈண்டுதலானே ஏனையோரும் அறத்திற் றிரியாது
ஒழுகுதற்கு இடமான பதி என்க. பதி - நகரம்.
அறத்தொடு என்புழி அறம். அந்தணர்க்கு நூலோர் வகுத்த
அறுவகைப்பட்ட ஒழுக்கம் என்க. அவையாவன: ஓதல், ஓதுவித்தல்,
வேட்டல், வேட்பித்தல், ஈதல் என்பனவாம். இதனை,
"ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறுபுரிந் தொழுகும்
அறம்புரி அந்தணர் வழிமொழிந் தொழுகி"
(24)
எனவரும் பதிற்றுப்பத்தானும் உணர்க.
வேதம் முற்றி என்றது வேதங்களைப் பொருளுணர்ச்சியோடே
கசடறக் கற்று நிரம்பி என்றவாறு. தவம் முற்றி என்றது கற்றதனால்
உணர்வு பெருகிப் பொறிபுலனடங்க நின்று என்க.
விறற்புகழ் என்றது, இவ் வறவொழுக்கத்தும், வேதப்
பயிற்சியினும்,
தவவொழுக்கத்தினும் இவரை ஒப்பார் பிறரிலர் என உலகம் புகழும்படி
விளங்கிநிற்றல். இவ்வெற்றிகளைத் தமிழ்நூலோர் வாகை என்பர். ஈண்டுக்
கூறப்பட்ட புகழ் பார்ப்பன வாகை எனப்படும்.
அஃதாவது,
ஓதங் கரை தவழ்நீர் வேலி யுலகினுள்
வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும்--ஏதம்
சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த
விடுசுடர் வேள்வி யகத்து" (புறப்பொருள் வெ - 163)
எனவரும்.
பார்ப்பனர் தம் அறத்திலே பிறழாது நிற்பவே, அவர்
வழிப்பட்ட
ஏனை அரசர் வணிகர் வேளாண்மாந்தர் ஆகியோரும் தத்தம் அறத்திலே
பிறழாது நிற்றல் ஒருதலையாகலின், 'அந்தணர் ஈண்ட அறத்திற்றிரியாபதி'
என்றார். ஈண்டு அறம் என்றது,
"ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்" (தொல். புற. சூ. 19)
என வகுக்கப்பட்ட அரசரும், வணிகரும் வேளாளருமாகிய ஏனையோர்க்
குரிய ஒழுக்கங்களை என்க. |
|
|
|