ஏற்றிவைத்து நிலைபெறச் செய்து,
அமுது கடைய - அமிழ்தம் திரண்டெழும்படி
கடைதற்கு, இருவயின் நாணாகி - அம்மலையாகிய மத்தினை இழுப்பதற்கு அதன்
இருபுறத்தினும் கயிறாகி, மிகாஅ இரு வடம் வாங்க - தேவரும் அசுரரும் ஆகிய
இருதிறத்தோரும் பற்ற எஞ்சிய இருபுறத்து அந்நாணை அத் திருமாலே தனது
எண்ணிறந்த கைகளானும் பற்றி இழுப்ப, ஒரு தோழக் காலம் - இவ்வாறு
அப் பாற்கடல் கடையக் கழிந்த ஒரு தோழக் காலமும், உகாஅ வலியின் -
தமது அழியாத ஆற்றலாலே, அறாஅது - இடையறாமல், அணிந்தாரும் -
அம் மத்தின்கண் நாணாகிக் கிடந்து அழகு செய்த வரும்;
(வி-ம்.) பாற்கடல் என்பது தோன்றத் திகழொளி
முந்நீர் என்றார். முந்நீர்
என்றது மூன்று நீரினையுடையது அல்லது மூன்று தன்மையுடைய தென்னும் தன்
பொருள் குறியாமல் வாளா கடல் என்னும் பெயர் மாத்திரையாக நின்றது.
சிரம் என்றது ஈண்டு உச்சி யென்னும் பொருட்டாய்
ஆமையுருக்
கொண்ட திருமாலின் முதுகினை உணர்த்தி நின்றது.
மிகாஅ - மிகுந்த. தேவரும் அசுரரும் பற்றி எஞ்சிய
இருபுறத்து
வடங்களையும் திருமாலே பலப்பல கைகளைத் தோன்றுவித்துப் பற்றி இழுத்துக்
கடைந்தனர் என்ப. இதனை,
"அழியும் பணிவெண் டிரைபுரட்டு மாழி வயிறு கிடங்கெழுந்து
கிழிய நெடுமால் வரை துளங்கிக் கீழ்வீழ்த் திடலுந் தனிநின்று
சுழலும் பசும்பொற் கிரிமுதுகு சொறிந்தாங் கணிதி னிளநறவம்
ஒழுகுந் துளவோன் மோட்டாமை யுருவ மெடுத்துத் தாங்கினனால்"
என்றும்,
"தாங்கும் வரைப்பொற் குடுமிமிசைத்
தடக்கை யமைத்து நிலைநிறுவத்
தேங்கொள் கமல மலர்க்கைசில
தீவா யரவம் பணிகொள்ள
ஓருங்குஞ் சுடர்ப்பூந் தொடியுடுத்த
வோரா யிரந்தோள் உடையபிரான்
ஏங்கும் பரவைக் கடல்கடைந்த
இறும்பூ தென்னென் றியம்புதுமால்"
(ஆ - பு. பாக. கடல்கடை: 18-19)
என்றும் வரும் பாகவதத்தானும் உணர்க.
தோழங்காலம். என்றது தோழம் என்னும் பேரெண்ணின்
அளவிற்றாகிய
ஊழிக்காலம் என்றவாறு. இதனை, |
|
|
|