பணிவு இல் சீர் - தான் பிறரைப்
பணிதல் வேண்டாத சிறப்பு என்க.
அஃதாவது தனக்கொரு தலைவனின்றி அனைவர்க்கும் தானே தலைவன்
ஆகும் சிறப்பு என்க. "சேர்ந்தறியாக் கையானை" என மணிவாசகப்
பெருமான் இயம்பியதும் இக் கருத்தையுடையதே யாகும்.
விடைப்பாகன் - காளையூர்தியுடையோன்; சிவபெருமான்.
கல்
- மலை. மலைகளிலெல்லாம் உயர்ந்த சென்னியையுடைய இமயம் என்க.
இமயவில்லுக் கேற்ற நாணாகிச் சிவபெருமானுக்குப்
புகழ்தந்தார்.
எனவே மந்தரமலைக்குக் கடைகயிறாகித் திருமாலுக்குப் புகழ்தந்தாரும்
இமயத்திற்கேற்ற நாணாகிச் சிவபெருமானுக்குப் புகழ்தந்தாரும் தாமே
என முதற் கடவுளர் புகழ்க்குக் காரணமான சிறப்புடையர் எனப்
புகழ்ந்தவாறாதல் உணர்க.
என்றிவ்வாறு ஆதிசேடனாரைப் படர்க்கையிற் பரவிப்
பின்னர்
இருந்தையூரமர்ந்த எம்பெருமானை முன்னிலையாக்கி வாழ்த்தி முடிக்கின்றார்.
79 - 82: அணங்குடை . . . . . . . . . ஒருங்கே
(இ - ள்.) அணங்கு உடை ஆயிரம் அருந்தலை விரித்த
கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி - எம்பெருமானே!
இவ்வாறு பல்வேறு சிறப்புடையோரும் கண்டோர்க்கு அச்சஞ்
செய்தலையுடைய ஆயிரமாகிய அரிய தலைகளைப் பரப்பி நினக்கு
நிழல் செய்வோரும் திரண்ட சுற்றத்தினையுடையாரும் தலைமைத்
தன்மையுடையோருமாகிய அச் சேடனாரை வணங்கி, நின் நல் அடி
எம் சுற்றமொடு ஒருங்கே ஏத்திப் பரவுதும் - நினது நல்ல திருவடியை
எமது சுற்றத்தாரோடு ஒருசேர ஏத்தி வாழ்த்தா நின்றேம், எல்லேம்
பிரியற்க - அஃதெற்றுக்கெனின் நின்னடியேமாகிய யாமெல்லேமும்
நினது திருவடி நீழலை எப்பொழுதும் பிரியாதிருக்க வேண்டும் என்று
கருதியேயாம்.
(வி - ம்.) அணங்கு - அச்சம்; வருத்தமுமாம். கணம்
- திரள்
சுற்றம் என்றது சேடனாரின் இளைஞர்கள் தொண்ணூற்றென்பதின்
மரையும் என்க. அண்ணல் - தலைமைத்தன்மையுடையோன். நினது
திருப்பாயலும் குடையுமாய்ச் சிறந்த அண்ணலை - முதலில் வணங்கிப்
பின்னர் நின்னை ஏத்திப் பரவுதும் என்றவாறு. இதனால் நின் அடியார்
எமக்கு நின்னையே ஒப்பவர் ஆவர் என்று அடியார் பெருமை
உணர்த்தினமையும் உணர்க.
உயிர்களின் பிறவிப்பிணி அகற்றுவது திருவடியே ஆதலின்
நின்னினும் நல்லனவாகிய திருவடி என்பார் "நல்லடி" என்றார்.
மாயோயே மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி எனவும், "நின்னிற்
சிறந்த நிள்றாளிணையவை" எனவும் இந் நூலின்கண் முன்னும்
போந்தமை உணர்க.
எல்லேம் - யாமெல்லோரும்.
எல்லேம் பிரியற்க எனவே என ஒருசொல் வருவித்து
முடிக்க.
எல்லேம் பிரியற்க என்றது, பொருளும் பொன்னும்
போகமு
மல்ல நின் திருவடியைப் பிரியாமையே" என்பதுபட நின்றது.
ப.--25 |
|
|
|