புகுமள வளவியலிசை சிறைதணிவின்று வெள்ளமிகை
வரைபலபுரை யுயர்கயிறணி பயிறொழில்
மணியணி யானைமிசை மைந்தரு மடவாரும்
70 நிரைநிரை குழீஇயின ருடன்சென்று)
குருமணி யானை இயல்தேர்ப் பொருநன்
திருமருத முன்றுறை முற்றங் குறுகித்
தெரிமருதம் பாடுப பிணிகொள்யாழ்ப் பாணர்
பாடிப் பாடிப் பாய்புனல்
75 ஆடி யாடி யருளியவர்
ஊடி ஊடி உணர்த்தப் புகன்று
கூடிக் கூடி மகிழ்பு மகிழ்பு
தேடித் தேடிச் சிதைபு சிதைபு
சூடிச் சூடித் தொழுது தொழுது
80 மழுபொடு நின்ற மலிபுனல் வையை
விழுதகை நல்லாரு மைந்தரு மாடி
இமிழ்வது போன்ற திந்நீர் குணக்குச் சான்றீர்
முழுவது மிச்சிலா வுண்டு;
சாந்துங் கமழ்தாருங் கோதையுஞ் சுண்ணமும்
85 கூந்தலும் பித்தையுஞ் சோர்ந்தன பூவினு மல்லாற்
சிறிதானு நீர்நிறந் தோன்றாதிவ் வையையாறு
மழைநீர் அறுகுளத்து வாய்பூசி யாடும்
கழுநீர் மஞ்சனக் குங்குமக் கலங்கல்
வழிநீர் விழுநீர் அன்று வையை;
90 வெருவரு கொல்யானை வீங்குதோள் மாறன்
உருகெழு கூட லவரோடு வையை
வருபுன லாடிய தன்மை பொருவுங்கால்
இருமுந்நீர் வையம் பிடித்தென்னை யானூர்க்
கொருநிலையு மாற்ற வியையா வருமாவின்
95 அந்தர வானியாற் றாயிரங் கண்ணினான்
இந்திரன் ஆடுந் தகைத்து.
என்பது வையையின்கண் தலைவன் பரத்தையரோடு நீராடினான் என
அறிந்த தலைமகள் ஊடியிருப்ப அவ் வூடலுணர்த்தும்படி தோழியை
வாயிலிரந்த அத் தலைவனுக்குத் தோழி வையையது வரவும்
ஆண்டுப்பட்ட நிகழ்ச்சியும் |
|