கூறுமுகத்தானே அவனது பரத்தமையை
யுணர்த்தி வாயின் மறுத்தது.
குறிப்பு: இப் பாடல் தொல், செய்யுளியல்: 118 ஆம் நூற்பா மேற்கோளாக
இளம்பூரணத்திற் கண்டது.
உரை
1 - 4: மாநிலம் . . . . . . . . கூடல்
(இ - ள்.) எழில் வானம் - அழகிய மேகம், மலி பெயல் தலைஇ - மிக்க
மழையைப் பொழிந்து, மாநிலம் தோன்றாமை - இந்தப் பெரிய நிலம்
தோன்றாமல் மறையும்படி, ஏம நீர் இகுத்தரும் பொழுதினான் -
உலகிற்குப் பாதுகாவலாகிய நீரினை வீழ்த்திய பொழுதிலே, காமரு
வையை - கண்டார்க்கு விருப்பம் வருதற்குக் காரணமான
வையையாற்றின்கட் பெருகிய வெள்ளம், நாகம் நீள் மணிவரை -
நாக முதலிய தருக்கள் ஓங்கி வளர்ந்த மணிகட்குப் பிறப்பிடமான
சைய மலையின்கண் அத் தரு முதலியவற்றின்கண் உதிர்ந்த, பல நறு
மலர் விரைஇ - பல்வேறு நறிய மலர்களினது மணங்களையும் ஏற்று
மணங் கமழ்ந்து, கூடல் கடுகின்று - நான்மாடக்கூடல் எனப்படும்
மதுரைக்கு விரைந்து வந்தது.
(வி - ம்.) வானம்: ஆகுபெயர்; மேகம். மலிபெயல் - மிக்க மழை.
தலைஇ - பொழிந்து. பொழிந்து இகுத்தரும் பொழுதினான் என்க.
இகுத்தல் - வீழ்த்துதல். நிலம் யாண்டும் நீரானே மறையும்படி வீழ்த்திய
பொழுது என்க. ஏமம் நீர் - உலகிற்குப் பாதுகாவலாகிய நீர் என்க.
"வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணரற் பாற்று"
(குறள் - 11)
என்றும்,
"விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது"
(குறள் - 16)
என்றும் ஓதுபவாகலான் ஏமநீர் என்றார்.
நாகம் - ஒருவகை மரம். இனம் செப்பு மாற்றான் நாக முதலிய மரங்கள்
என்க. மணி வரை - அழகிய மலையுமாம். மலை - சையமலை, என்க.
பல நறுமலரையும் சுமந்து அவற்றின் மணத்தையும் ஏற்றுக் கமழ்ந்து
என்க.
"வையை யென்ற பொய்யாக் குலக்கொடி
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
|