"ஊரங் காடி யுய்த்துவைத் ததுபோல்
நீரங் காடி நெறிப்பட நாட்டிக்
கூல வாழ்நர் கோன்முறை குத்திய
நீலக் கண்ட நிரைத்த மருங்கின்
உண்ண மதுவும் உரைக்கு நானமும்
கண்ணமுஞ் சாந்துஞ் சுரும்பிமிர் கோதையும்
அணியுங் கலனும் ஆடையு நிறைந்த
கண்ணகன் கடைகள் ஒண்ணுத லாயத்துக்
கன்னி மாண்டுழித் துன்னுபு நசைஇய
தூதுவர் போல மூசின குழீஇ"
(பெருங் 1-38. 56-65)
எனவரும் கதையானும் உணர்க.
11 - 18: கைபுனை . . . . . . போவநர்
(இ - ள்.) கை புனை தாரினர் - தொழிற்றிறம்படத்
தொடுத்த
தாரினையுடையராய், கண்ணியர் - தலையிற் சூட்டும்
மாலையினையுடையராய், ஐ எனும் ஆவியர் ஆடையர் - நுகர்ந்தோர்
ஐ என்று வியந்து பாராட்டுதற்குரிய நறுமணப் புகையூட்டிக்
கொண்டோராய், வியக்கத்தக்க நுண்ணிய ஆடையினை அணிந்தோராய்,
நெய்யணி கூந்தலர் பித்தையர் - கூந்தலிடத்தேயும் பித்தையினிடத்தேயும்
மண நெய் பூசப்பெற்றோராய், தங்காச் சிறப்பின் தளிர் இயலார்செல
அப்பொங்குபுரவிப் புடை - அவருள் தாழாத பெண்மை நலத்தினையும்
மாந்தளிர் போன்ற நிற அழகினையும் உடைய மகளிர் நிமிர்ந்த
செலவினையுடைய குதிரைகளை ஊர்ந்து செல்லாநிற்ப அக் குதிரைகளின்
பக்கத்தே, மெய் அணி யானை மிசையரா ஒய்யெனப் போவோரும் -
உடலினை ஒப்பனை செய்யப்பட்ட யானைகளை ஏறி ஆடவர்கள்
செல்லாநிற்பவும், பொங்கு சீர் வையமும் தேரும் அமைவோரும் -
மிக்க அழகுடைய வண்டிகளினும் தேர்களினும் ஏறியிருந்து ஊர்ந்து
செல்வோரும், எவ்வாயும் போய்ப் பொய்யாம் என்னாப் புடை
கூட்டிப் போவாரும் - சிலர், யாம் எவ்விடங்களினும் பிரிந்து போய்
ஒருவர்க்கொருவர் காணப்படாதே மாகேம் என்று தம் சுற்றத்தாரைச்
சேர வம்மின் எனத் தம் பக்கலிலே கூட்டி அழைத்துச் செல்லாநிற்போரும்,
(வி-ம்.) தொழிற்றிறம்படப் புனைந்த தார் என்பார்,
கை புனைதார்'
என்றார். கைபுனை என்பதனைக் கண்ணிக்கும் கூட்டி யுரைத்துக் கொள்க.
தார் - மார்பின் அணியும் மாலை. கண்ணி - தலையிற் சூடும் மாலை;
இதனை,
"கண்ணி கார்நறுங் கொன்றை காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை"
(கடவுள் வாழ்த்து)
|
|
|
|