கற்றுணர்ந்த சான்றோரும் கல்லாமக்களும்
கயமாக்களும், பெற்றாரும் -
மக்களைப் பெற்றவரும், பெற்றார்ப் பிழையாத பெண்டிரும் - தம்மை
மணந்த கணவன் சொற்கடவாத கற்புடைப் பெண்டிரும், பொன் தேரான்
தானும் - இவர்கட்கெல்லாம் வேந்தனாகிய பொன்னாலியற்றிய
தேரையுடைய பாண்டியனும், பொலம் புரிசைக் கூடலும் - பொன்
மதிலையுடைய அம் மதுரையிலுள்ள ஏனையோரும் ஆகிய மக்கட்
கூட்டம், வையைத் துறை முற்றின்று - வையையாற்றினது
நீராடற்றுறையைச் சென்று எய்தியது.
(வி-ம்.) மெய்யாப்பு - சட்டை. வையகத்துக்கு; வேற்றுமை
மயக்கம், ஆடலும் பாடலும் நகுதலும் நக்கு ஓடுதலும் ஓடியிளைத்தலும்
அளவிகந்த மகிழ்ச்சியால் மாக்களிடையுண்டான நிகழ்ச்சிகள் என்க.
ஊர்க்குத் திரிவார் - ஊர்நோக்கித் திரும்பிச்
செல்வோர். கயவர்
- கீழ்மக்கள். பெற்றார் - மகப்பெற்ற சான்றோர், பெற்றார்ப் பிழையாத
பெண்டிர் - கற்புடை மகளிர். பொற்றேரான் - பாண்டியன். பொலம்
புரிசை - பொன்மதில். கூடலும் என்றது. கூடலிலுள்ள ஏனையோரும்
என்றவாறு. ஆகிய கூட்டம் என ஆக்கச் சொல்லும் பயனிலைக்கு ஏற்ற
கூட்டம் என்னும் ஒருமைச்சொல்லும் வருவித்துக் கூறுக. முற்றின்று:
முற்றியது - அடைந்தது.
இதுகாறும் தோழி வையை வரவும் மாந்தர் வரவும் கூறி
மேலே
தலைமகன் பரத்தையரோடு நீராடினமை உணர்ந்தமையைக் குறிப்பான்
உணர்த்தி வாயின் மறுப்பாள் அதனைப் பிறர் மேலிட்டுக் கூறுகின்றாள்.
28 - 33: துறையாடும் . . . . . . . . துறை
(இ- ள்.) பிறையேர் நுதலியர் எல்லாரும் தம்முன்
துறையாடுங்
காதலர் தோள் புணையாக மறையாடுவாரை அறியார் மயக்கி -
பிறைபோலும் அழகிய நெற்றியினை உடைய எல்லா மகளிர் தம்முன்பே
தம் கணவன்மாருடைய தோள்களையே தெப்பமாகக் கொண்டு மறைவாக
நீராட நின்ற பரத்தையரை அறியாதவராக மயக்குவித்து, நிகழும் நிகழ்ச்சி
- நிகழாநின்ற நீர் விளையாடல்களை, எம்பால் என்று ஆங்கே(?) .......
அவண் விளைத்து கண்டு - அவ்விடத்தே நிகழச்செய்து பார்த்து,
இப்பால் - இவ்விடத்தே, வையை அகல் துறை அல்கும் - வையைப்
புதுப்புனல் அகன்ற துறையிடத்தே வாளாகிடக்கும்;
(வி - ம்.) இது, தலைவன் வேறு துறையிடத்தே பரத்தையருடன்
நீராடினான் எனக் கேட்டிருந்த தோழி அந்நிகழ்ச்சியை வையை நீரின்
மேலதாக்கி இவ்வையைநீர் பிற துறைகளிடத்தே பரத்தையரோடு தலைவர்
நீராடும் நிகழ்ச்சியை விளைவித்து அத் தலைவர் தத்தம் தலைவியரோடு
ஆடுதற்குரிய இப் பெருந்துறையில் வாளா பெருகிக் கிடக்கும் என்று
தலைவன் பரத்தமையையும் அவன் தலைவியோடு |
|
|
|