நீராடாக் குற்றத்தையும் குறிப்பால்
உணர்த்தியபடியாம். நக - 'எம்பால்
என்றாங்கே' என்னும் தொடர்க்குப் பொருள் விளங்கிற்றில்லை ஆராய்க.
31-2. "நிகழு நிகழ்ச்சி எம்பா லென்றாங்கே
இகலுவ செல்வ நினைத்தவெட் கண்டிப்பால்"
என்றும் பாடம்.
33. 'அகலல்குற் பையேய்த்தது' என்றும் பாடம்.
நேரிழையார் மறையாடுவாரை அறியாதவராய் மயக்கி
விளைத்து
என இயைக்க. இதனால் நீ தலைவி அறியாள் என்று பரத்தையரோடு
பிறதுறைக்கண் நீராடியதனைத் தலைவி கேட்டறிந்துள்ளாள் என்று
உணர்த்தினாளாயிற்று.
இனி, மேலும் காதற் பரத்தையரோடும் இற்பரத்தையரோடும்
நீராடியபொழுது ஆண்டுப்பட்டதொரு நிகழ்ச்சியை ஏதிலார் மேலிட்டுக்
கூறுகின்றாள்.
34 - 40: காதலான் . . . . . . . . வியப்பு
(இ-ள்.) காதலான் மார்பிற் கமழ்தார் - காதற்
பரத்தையோடு
நீராடினான் ஒரு தலைவன் ஆண்டுவந்த இற்பரத்தைக்குத் தன்
மாலையை அக் காதற்பரத்தை யறியாதபடி கொடுக்கக் கருதித் தன்
மார்பின் மாலையை ஒழுகும் புனலிலே விட்டானாக, ஏதிலாள் புனல்
வாங்கிக் கூந்தலிடக் கண்டு - அம் மாலையை அவ் விற்பரத்தை
நீரினின்றும் எடுத்துத் தன் கூந்தலிலே சூடிக்கொண்டாளாக, அதனைக்
கண்ட காதற்பரத்தை விரைந்து அவ் விற்பரத்தையை அணுகி, மற்று
அது தா தா என்றாளுக்கு - ஏடி அம் மாலையை என்பாற் கொடு
கொடு என்று கேட்ப அங்ஙனம் கேட்ட காதற்பரத்தையை நோக்கி
இற்பரத்தை, புனல் தானே தந்து வேய் தந்தது - ஏடி இம்மாலை
நின்னுடையதன்று இப்புதுப்புனல் எங்கிருந்தோ கொணர்ந்து என்
கூந்தலிலே சேர்த்தியது என்று கூற, என்னை? - அதுகேட்ட
காதற்பரத்தை என்னிது! என்னிது! எனத் தன்னுட் கூறி அவளை
நோக்கி, நுணங்கு இழையாய் மற்றது விளைந்தமை நோதல் செய்யேன் -
நுண்ணிய தொழிற்றிற மமைந்த அணிகலன்களையுடைய அணங்கே
அஃது அங்ஙனம் நிகழ்ந்தமைபற்றி யான் வருந்துகின்றிலேன் எனினும்,
புனல் இச்செவ்வி போதல் உண்டாம் அறிந்து புணர்த்தது ஓஓ பெரிதும்
வியப்பு - இப் புதுநீர் தான் இப்பொழுது நினது செலவு இவ்விடத்தே
நிகழ்வதாம் என்பதனை அறிந்து இம் மாலையினை நின்பாற் கொணர்ந்து
சேர்த்ததாகிய செயல் ஓஒ ஓஒ மிகவும் வியத்தகுமொரு செயலேயாகும்
அது நினைந்தே, யான் வியவாநின்றேன் எனக் கூறி; |
|
|
|