பக்கம் எண் :

பரிபாடல்- வையை397

பட நின்றது, ஏதிலாள் கூந்தலிடத்தே சூட்டப்பட்டமையின் தார்
என்னாது கண்ணி நீர் விட்டோய் என்றாள். எனவே நினது தாரினை
அவட்குக் கண்ணியாக விட்டனை என்றாளாயிற்று.

      இனி, மேலே தோழி தலைவனை நீ தலைவியோடு சென்று
நீராடியின் புறா தொழிந்தனை என்று குறிப்பானே குற்றம் கூறுகின்றாள்.

46 - 50: பணிவில். . . . . . . . புனல்

      (இ-ள்.) பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல் -
பிறமன்னர் தன்னைப் பணிதல் அன்றித் தான் ஒருவரைப் பணிதல்
இல்லாத உயர்ந்த இறைமைத் தன்மையையுடைய பாண்டியனுடைய
மதுரையின் கண்ணே வாழும், மணி எழில் மாமேனி முத்தம் முறுவல்
அணி பவளம் செவ்வாய் அறம் காவல்பெண்டிர் - மணிபோன்ற
அழகினையும் மாந்தளிர்போன்ற நிறத்தினையும் முத்துப்போன்ற
பல்லொழுங்கினையும் அழகிய பவளம் போன்று சிவந்த வாயினையும்
கற்புடைமையைக் காக்கும் காவலினையும் உடையகுல மகளிர், மணி
அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடி வையை புனல் தணிவு இன்று
- மணிகளாலியன்ற அணிகலன்களைத் தமக்கு அணிந்த உரிமையுடைய
தத்தம் கணவன்மாரோடு நீராட இவ்வையை யாற்றுப் புதுநீர் வடிந்திலது;

      (வி-ம்.) என்றது குலமகளிர் தங் கொழுநரோடு ஆடக்கழியாமல்
அவர்தம் கொழுநர் பரத்தையரோடு ஆடக்கழிந்தது என்று இரங்கியவாறு.

      பணிவு இல் சிறப்பு - தனக்கு இறைவராவார் ஒருவரும் இன்றித்
தானே அனைவர்க்கு இறைவனாம் சிறப்பு என்க. பஞ்சவன் -
பாண்டியன். ஐந்துவகை நிலனும் தன்னாட்டிலமையப் பெற்றவன் என்பது
கருத்து. மணி எழில் மாமேனி என்பதற்கு நீலமணி போலும் அழகிய
மாமை நிறமுடைய மேனி எனினுமாம். முறுவல் - பல். முத்து, பவளம்
என்புழிச் செய்யுளின்பம் உணர்க. மணி - மங்கலவணி என்க. உரிமை
மைந்தர் - கணவர். ஆடி என்னும் செய்தனெச்சத்தைச் செயவெனெச்ச மாக்குக.

      மைந்தர் பரத்தையோடாடத் தணிந்தது என்பது குறிப்பெச்சம்.

      இனி, தலைவன் பரத்தையரோடு ஆடினமை ஊரவராற் றலைவி
கேட்டு ஊடியுள்ளாள் என்பதனைக் குறிப்பாற் கூறுகின்றாள்.

51 - 57: புனலூடு . . . . . . . . எனவாங்கு

      (இ-ள்.) புனலூடு போவது ஓர் பூமாலை ஊழ்வகை கொண்டை
எய்திற்று என்று ஏற்று - புதுநீரின்கண்ணே செல்லா நின்றதொரு
மலர்மாலை நீர்கொணர்ந்தமுறைமையாலே எமது கொண்டையினை வந்து
பொருந்திற்று என்று கூறி, பூமாலை