மதுரையிலுள்ள ஆடவரும் மகளிரும்
பெரிதும் ஆடுதலானே வையை நீர்
பருகவும் குளிக்கவும் தகுதியற்றதாயிற்று, என்றது நீராடன் மிகுதி கூறியபடியாம் என்க.
ஈக்கள் மொய்த்தற்குரிய சமைக்கப்பட்ட கள் என்க.
படிவு
நீரிற்றேய்தல். தோயலர் - நீராடினாரிலர். தேம் - தேன்: கள்.
வாயும் பூசுதல் உறார் எனற்பால உம்மை செய்யுள் விகாரத்தாற்
றொக்கது.
64 - 67: விரை. . . . . .மிகை
(இ-ள்.) புனல் விரைபு இரை துறை கரை அழிபு (ஊர?)
இழிபு -
ஊர்தரும் வையைநீர் விரைந்து ஆரவாரித்துத் துறையும் கரையும்
அழியும்படி இழிந்து ஒழுகாநிற்கும், நீர் (கரையொடு கடலிடை
வரையொடு கடலிடை?). . . .. . . . . . . . . . . . . . . நிரைநிரை
நுரைதரும் - அந் நீர் வரிசை வரிசையாக நுரைகளைச் சுமந்து
கொணரும், நுரையுடன் மதகுதொறு இழி தரும். புனல் -
அந் நுரையோடே மதகுகள்தோறும் புகுந்து செல்லும் அந் நீர் மேலும்,
கரைபுரளிய செல்லும் - ஆண்டாண்டு கரை புரளும்படியும் உடைத்தும்
செல்லாநிற்கும், மறிகடல்புகும் அளவு அளவு இயலி இசை வெள்ளமிகை
சிறை தணிவின்று - இவ்வாறு அந்நீர் அலைபுரளாநின்ற கடலிடத்தே
புகும் அளவு அளவு மேலும் மேலும் வந்து புகுதலானே
அவ் வெள்ளத்தின் மிகுதி கரையடங்கும்படி தணிந்திலது.
(வி-ம்.) விரியரை விரைநுரை என்றும் பாடம், வரையொடு
கடலிடை என்பதற்குச் சையமலைதொடங்கிக் கடல்காறும் எனினுமாம்.
நீர் மலை தொடங்கிக் கடல்வரையில் நிரைநிரை நுரைதரும் என்க.
மதகுதோறும் இழிதருதற்குரிய புனல் அவற்றினடங்காது
கரை
புரளும்படியும் செல்லும் என்க. அந் நீர் கடல்புகுமளவு மேலும் மேலும்
வந்து புகுதலாலே வெள்ளமிகை தணிவின்று என்க, அளவு அளவு
இயலி - அவ்வளவு அவ்வளவு வந்து புகுந்து என்றவாறு.
இதனால் வையைநீர் மிக்க நுரையோடே துறைகளையும்
கரைகளையும் அழித்து மேலும்மேலும் பெருகிற்று என்றுணர்த்தப்பட்டது.
68 - 75: வரை . . . . . . ஆடியாடி
(இ-ள்.) வரைபுரை உயர் கயிறு அணி தொழில் பயில்மணி
அணி
பல யானை மிசை - மலையை ஒத்துயர்ந்த புரசைக் கயிறிட்டு
ஒப்பனை செய்யப்பட்ட தமது தொழிலை நன்கு பயின்ற மணிகட்டப்பட்ட
பலவாகிய யானைகளின்மேல் ஏறி ஊர்ந்து, மைந்தரும் மடவாரும்
நிரைநிரை குழீஇயினர் - ஆடவர்களும் மகளிரும் வரிசை வரிசையாக
வந்து கூடி, குருமணி யானை |
|
|
|