மூன்றாம் பாடல்
_________
திருமால்
பொருட் சுருக்கம்
1 - 3: திருமாலே! திருமாலே! அன்பராயினார்
பிறவிப்
பிணியை அறுக்கும் மருந்தாகிய திருவடிகளையும், நீலமணி
மேனியினையும் உடைய திருமாலே!;
4 - 14: நெருப்பு, காற்று, வானம், நிலம், நீர்
என்னும் ஐம்பெரும்
பூதங்களும், திங்களும், வேள்வித் தலைவனும், செவ்வாய் முதலிய
கோள்கள் ஐந்தும், அசுரரும், ஆதித்தர் பன்னிருவரும், வசுக்கள்
எண்மரும், உருத்திரர் பதினொருவரும், அச்சுவினிதேவரும், இயமனும்,
கூற்றுவனும், மூவேழுலகும், அவற்றுள் உயிரினங்களும் ஆகிய
இவையெல்லாம் நின்னிடத்தே தோன்றி நின்னுள்ளேயே விரிந்தன என்று
வேதங்கள் கூறாநின்றன. அதனால், எளியேமும் கூறாநின்றேம்.
பிரமதேவனும், அவன் தந்தையும் நீயே என்று அந்தணர் அருமறை
கூறாநிற்கும்;
15 - 30: அமரரிடமிருந்து அமிழ்தம் கொணர்ந்து
தன்
அன்னையின் அல்லல் அகற்றிய அணி சிறைக் கருடனை ஊர்தியாக
உடையை; அக் கருடனையே கொடியாகவும் உயர்த்தினை; நினது
திருவடியைத் தொழாதார் இலர். கீழேழுலகமும் ஒருங்கே அளந்த
திருவடியினை உடையை, ஊழிமுடிவில் கடலிலே அழுந்துகின்ற
நிலமகளை வராகமாகிக் கொம்பினாலே உயர எடுத்தாய் எனவும்,
அவ்வூழியிலே பொழியாநின்ற மழைநீரை அன்னச் சேவலாகிச் சிறகாலே
வறளச் செய்தோய் எனவும், முனிவரும் தேவரும் நின்னைப் புகழ்வர்;
எளியேமும் அவர் முறையைப் பின்பற்றியே நின்னைப் புகழாநின்றேம்;
31 - 46: கேசி என்ற அசுரனைக் கொன்றொழித்தவனே!
நின்புகழ் போலவே நின் கைகளும் எண்ணிறந்தன, அவற்றுள், பாற்கடல்
கடைந்த அமரர்க்கும் அசுரர்க்கும் அமிழ்தத்தை ஒப்ப வழங்காமல்
அமரர்க்கு மட்டுமே வழங்கிய நடுவு நிலைமையில்லாத கையும் ஒன்றுளது;
எண்ணிறந்த கைகளையும், யாக்கைகளையும் உடையோய்! நினது
பெருமை நீயே உணர்வதல்லது பிறரால் உணரப்படுவதோ? |
|
|
|