பக்கம் எண் :

பரிபாடல்- வையை405

ஐந்தாம் பாடல்
------

இதன் பொருள் தெற்றென விளங்கவில்லை

முன்புற் றறியா முதற்புணர்ச்சி மொய்குழலை
இன்புற் றணிந்த இயலணியும் வன்பணியும்
நாணேனுந் தொல்லை அணியென்ன நன்னுதலை
. . . . . . . . . . . . . . . . . . ..

     (சொல் விளக்கம்) முன்புற்று அறியா முதற்புணர்ச்சி என்றது.
இயற்கைப் புணர்ச்சியை. மொய்குழல் - அடர்ந்த கூந்தல். தொல்லை
அணி - புணர்ச்சிக்கு முன்னர் ஒப்பனை செய்யப்பட்ட அணி என்க.
நன்னுதல் - நல்ல நெற்றி.

      இது நாற்கவிராசநம்பி அகப்பொருள் 129 ஆம் சூத்திரவுரையில்
காணப்பட்டது.