பக்கம் எண் :

பரிபாடல்- மதுரை407

ஏழாம் பாடல்
-------

மதுரை

பொருட் சுருக்கம்

      மதுரைநகரம் திருமாலின் உந்தியின்மலர்ந்த தாமரை மலரை
ஒக்கும்; அந் நகரத்துள்ள தெருக்கள் அம் மலரின் இதழ்களை ஒக்கும்;
பாண்டியன் அரண்மனை அம்மலரகத்துள்ள பொகுட்டை ஒக்கும்;
அந் நகரில்வாழும் தமிழராகிய குடிமக்கள் அம் மலரின் தாதுக்களை
ஒப்பர்; அந் நகர்க்குவரும் இரவலர் தாதுண்ண வரும் வண்டுகளை
ஒப்பர்.

      மதுரையிலுள்ள மாந்தர் வேதமுழக்கத்தாலே நாள்தோறும்
துயிலெழுவரேயன்றி வஞ்சி நகரத்தாரும் உறையூராரும் போலக் கோழி
கூவுதலாலே துயிலெழுதலில்லை.

   மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
   பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்
   இதழகத் தனைய தெருவம் இதழகத்
   தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்
 5 தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்
   தாதுண், பறவை அனையர் பரிசில் வாழ்நர்
   பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
   நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
   ஏம வின்றுயில் எழுதல் அல்லதை
10 வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
   கோழியின் எழாதெம் பேரூர் துயிலே.

உரை

      (இ-ள்.) எம் சீர் ஊர் - எமது அழகிய மதுரை, மாயோன்
கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் - திருமாலினது
திருவுந்தித்தடத்தின் கண் தோன்றி மலர்ந்த தெய்வத் தாமரைப்
பூவினையே ஒப்பதாம், தெருவம் பூவின் அக இதழ் அனைய - அம்
மதுரையிலமைந்த தெருக்கள் அத்தாமரை மலரினது அகவிதழ்களையே
ஒப்பனவாம், அண்ணல் கோயில் - அம் மதுரையின் நடுவே அமைந்த
எம் வேந்தனாகிய