10 செயிர்தீர் செங்கட் செல்வநிற் புகழப்
புகைந்த நெஞ்சிற் புலர்ந்த சாந்திற்
பிருங்க லாதன் பலபல பிணிபட
வலந்துழி, மலர்ந்த நோய்கூர் கூம்பிய நடுக்கத்
தலர்ந்த புகழோன் தாரை யாகலின்
15 இகழ்வோன், இகழா நெஞ்சின னாகநீ யிகழா
நன்றா நட்டவவ னன்மார்பு முயங்கி
ஒன்றா நட்டவ னுறுவரை மார்பிற்
படிமதஞ் சாம்ப வொதுங்கி
இன்ன லின்னரொ டிடிமுர சியம்ப
20 வெடிபடா வொடிதூண் தடியொடு
தடிதடி பலபட வகிர்வாய்த்த உகிரினை
புருவத்துக் கருவல் கந்தத்தால்
தாங்கியிவ் வுலகந் தந்தடிப் படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர்புகழ் குன்றினொ டொக்கும்
25 நின், வெம்மையும் விளக்கமு ஞாயிற்றுள
நின், தண்மையுஞ் சாயலுந் திங்களுள
நின், சுரத்தலும் வண்மையு மாரியுள
நின், புரத்தலு நோன்மையு ஞாலத்துள
நின், நாற்றமு மொண்மையும் பூவையுள
30 நின், தோற்றமும் அகலமு நீரினுள
நின், உருவமும் ஒலியும் ஆகாயத்துள
நின், வருதலும் ஒடுக்கமு மருத்தினுள
அதனால், இவ்வு முவ்வு மவ்வும் பிறவும்
ஏமமார்ந்த நிற்பிரிந்து
35 மேவல் சான்றன வெல்லாம்
சேவலோங் குயர்கொடி யோயே
சேவலோங் குயர்கொடி
நின் னொன் றுயர்கொடி பனை
நின் னொன் றுயர்கொடி நாஞ்சில
40 நின் னொன் றுயர்கொடி யானை
நின், ஒன்றா உயர்கொடி ஒன்றின்று
விடமுடை யரவினுடல் உயிருருங் குவணம்
அவன், முடிமேல் வலந்தது பாம்பு
|
|
|
|