(வி - ம்.) நிறைவயின் - கற்புடைமையின்கண்; வழாஅது
- வழுவாமல், நின்சூலினர் - நின்னைச் சூற்கொண்டனர்: வேள்வித்
தீயிற் பெய்தலாலே கரு சேடமாய் விட்டபடியாலும் கணவர் வேண்ட
உண்டலாலும் நிறைவயின் வழாஅது என ஏதுக்கள் விரித்து ஓதுக.
நீலப் பைஞ்சுனை - நீலப்பூவினையுடைய பசிய சுனை என்க;
அஃதாவது சரவணப்பொய்கை, என்ப - என்று பௌராணிகர்
கூறாநிற்பர் என்றவாறாம் உருவமும் குணமும் வரலாறும் இல்லாத
நினக்கிவ்வாறு பௌராணிகர் கூறுவர். அது வாயுமல்ல பொய்யுமல்ல
என்றபடியாம். பெரும்பெயர் - பெரிய புகழ். 'நூறுமகஞ்செய்தாரே
அமர்தற்குரிய இந்திரபீடத்தில் அமர்ந்த அமரர் செல்வன்' என்பார்.
அரிதமர் சிறப்பின் அமரர் செல்வன் என்றார். அமரர் செல்வன் -
இந்திரன். இகந்து என்றது. வரம்பு கடந்து என்றவாறு. குழவியைக்
கோறல் அறமாகாது என்று கருதாமல் அற வரம்பு கடந்து எனினுமாம்.
ஒருவனை 'ஐ' பகுதிப்பொருளது, ஒருவன் ஆயினை என ஆக்கச்சொல்
வருவித்துக் கொள்க.
55 - 62: ஆராவுடம்பின்...................................மறிகொடுத்தோன்
(இ - ள்.) ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய
போரால்
- குழவிப் பருவத்தினை உடையை ஆதலான் வளராத உடம்பினை
உடைய நீ விரும்பி விளையாட்டாகச் செய்த அப்போரின்கண், வறும் கைக்குப் புரந்தரன்
உடைய - படை ஏந்தாத வறிய நின் கைகளுக்கே
ஆற்றாகவனாய் இந்திரன் புறமிட்டோடுதலானே, அல்லல் இல் அனலன்
- துன்பமில்லாத தீக்கடவுள் (இத்தகைய ஆற்றல் வாய்ந்த இவனே நம்
அமரர் படைக்குத் தலைவனாந் தகுதியுடையான் என்று கருதி), தன்
மெய்யில் பிரித்துச் செல்வ வாரணம் கொடுத்தோன் - தனது
உடலின்கண் தீத்தன்மையினின்றும் ஒரு கூற்றைப் பிரித்து வளப்பமான
கோழிச்சேவலாக்கிக் கொடுத்தானாக, வானத்து வளங்கெழு செல்வன்
தன் மெய்யிற் பிரித்து - அதுகண்ட வானுலகத்து வளம்பொருந்திய
செல்வமெல்லாம் உடைய இந்திரன்றானும் தனது தன்மையினின்றும்
ஒரு கூற்றைப் பிரித்து, திகழ் பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன்
- விளங்குகின்ற புள்ளிகளையுடைய தோகையானே அழகுடைய
மயிற்சேவலாக்கி அதனை நினக்கு அளித்தான், திருந்து கோல்
ஞமன் தன் மெய்யில் பிரித்து - திருந்திய செங்கோன்மையையுடைய
கூற்றுவன் தனது தன்மையினின்றும் ஒருகூறு பிரித்து அதனை,
இருங்கண் வெள்யாட்டு எழின்மறி கொடுத்தோன் - கரிய
கண்ணையுடைய வெள்ளாட்டினது அழகிய குட்டியாக்கி நினக்கு
அளித்தான்;
(வி - ம்.) ஆரா - நிரம்பாத: அஃதாவது வளராத என்றவாறு.
மிக இளங்குழவியாயிருக்கும்பொழுதே என்பார், ஆராவுடம்பின் நீ
என்றார். |
|
|
|