போரால் - போரின்கண்: வேற்றுமை
மயக்கம். வறுங்கை - படை ஏந்தாத
கை. புரந்தரன் - இந்திரன்.
தன் மன்னன் உடைந்தமை கருதித் துன்புறாமல் குழவி வென்றமைக்கு
மகிழும் தீக்கடவுள் என்பார், 'அல்லலில் அனலன்' என்றார். தீ இறைவன்
வடிவமாதலால் அக் குழவியின் வெற்றிக்கு மகிழ்ந்தான் என்பது குறிப்பு.
போரின்கண் வென்றோர் அவ் வெற்றிக்கு அடையாளமாக உயர்த்துவது
கொடியே ஆதல்பற்றித் தீக்கடவுள் முருகனுக்குக், கொடியாதற்குரிய
செல்வ வாரணம் கொடுத்தான் என்க. வாரணம் - கோழிச்சேவல்.
தன்மெய்யிற் பிரித்து என்றது. தனது தெய்வத்தன்மையினின்றும்
கூறுபடுத்தி என்றவாறு. முருகனுக்குக் கொடுக்கவேண்டிய செல்வம்
தன்பாலிருந்தும் அவற்றினும் சிறப்பாதற் பொருட்டுத் தன் மெய்யிற்
பிரித்து மயில் கொடுத்தான் என்பார், 'வானத்து வளங்கெழு செல்வன்'
என்றார். பொறி - புள்ளி. ஞமன் - யமன்; கூற்றுவன். தனது
ஆட்சியின்கண் சிறிதும் முறை பிறழாத கூற்றுவன் என்பார்,
'திருந்துகோல் ஞமன்' என்றார். திருந்துகோல் - செங்கோல்.
(பரிமே.) 62, இருங்கண் - கரிய கண்.
58, 60. 62. கொடைச்சொல் முன்னிலைக்கண் வழுவமைதியாய் வந்தது.
63 - 70: ஆஅங்கு.................................புகழ்வரம்பிகந்தோய்
(இ - ள்.) ஆஅங்கு - அவ்வாறு, அவரும் பிறரும் அமர்ந்து
படை
அளித்த - அத் தீக்கடவுளும் இந்திரனும் கூற்றுவனும் அவரல்லாத
ஏனைத் தேவர்களும் மகிழ்ந்து தத்தம் மெய்யிற் பிரித்துப் படைகளாக்கி
நினக்குக் கொடுத்த, மறியும் மஞ்ஞையும் வாரணச் சேவலும் வெள்ளாட்டு
மறியும் மயிலும் கோழிச் சேவலும், பொறி வரிச் சாபமும் -
இலச்சினையிடப்பட்ட வரிந்த வில்லும் மரனும் - தோமரமும், வாளும் -
வாட்படையும், இலை செறி ஈட்டியும் - இலை செறிந்த ஈட்டியும்,
குடாரியும் - கணிச்சியும், தெறுகதிர் கனலியும் - சுடுகின்ற
கதிர்களையுடைய மழுப்படையும், மாலையும் - மாலையும், மணியும் -
ஒலிமணியும் ஆகிய, வேறுவேறு உருவின் இவ்-வேறுவேறு
வடிவினையுடைய இவற்றை, ஆறுஇரு கைக்கொண்டு - நின்னுடைய
பன்னிரண்டு கைகளிடத்தும் ஏந்திக்கொண்டு, பொறிவரிக் கொட்டையொடு
- நீ பிறந்த தாமரைப்பூவினது புள்ளிகளையுடைய அழகிய
கொட்டையினின்றும் பெயரமாட்டாத அவ்விளம்பருவத்திலேயே, மறு
இல் துறக்கத்து அமரர் செல்வன்றன் - குற்றமற்ற வானுலகின்கண் வாழும்
தேவர் கோமானுடைய, புகழ் வரம்பு இகந்தோய் - புகழினது
எல்லையைக் கடந்த பெருமானே; |
|
|
|