பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்73

"மனமது நினைய வாக்கு வழுத்தமந் திரங்கள் சொல்ல
இனமலர் கையிற் கொண்டங்கு இ்ச்சித்த தெய்வம் போற்றிச்
சினமுதல் அகற்றி வாழும் செயல்அறம் ஆனால் யார்க்கும்
முனமொரு தெய்வம் எங்கும் செயற்குமுன் னிலையா மன்றே"
(சித்தியார் - சுப - செய்: 114)

எனவும் வரும் சித்தியார்ச் செய்யுள்களான் உணர்க.
"அன்பேஎன் அன்பேஎன் றன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும்--அன்பன்றித்
தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான்"
(திருக்களிற்றுப் - 55)

என்றபடி இறைவனடியை அடைதற்கு உறுதுணையாவது இறையன்பே ஆதல்
பற்றி இரண்டாவதாக அன்பு வேண்டினார்.
______________